அஜ்மீர் தர்ஹாவிற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்!
ராஜஸ்தானில் உள்ள அஜ்மீர் தர்கா, கலெக்டர் அலுவலகம் மற்றும் ஜெய்ப்பூர் ஐகோர்ட்டு கிளைக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை 10.13 மணியளவில், அஜ்மீர் கலெக்டர் அலுவலகத்தில் ஆர்.டி.எக்ஸ் சக்திவாய்ந்த வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக இ-மெயில் வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார், பாதுகாப்புப் படையினர், நுண்ணறிவு பிரிவு, மோப்ப நாய் குழு மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் விரைந்து சென்றனர். கலெக்டர் அலுவலகத்தில் முழுமையாக சோதனை நடத்தப்பட்டது. ஆனால் அங்கு எந்த சந்தேகமான பொருளும் கண்டுபிடிக்கப்படவில்லை.

தொடர்ந்து அஜ்மீர் தர்காவிலும் சோதனை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தர்காவில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இதேபோல் கடந்த 4-ம் தேதியும் மிரட்டல் வந்ததாகவும், அப்போது சோதனையில் எதுவும் கிடைக்கவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
