அடுத்தடுத்த அதிர்ச்சி.. மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

 
நிலநடுக்கம்

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் சீட்டுக்கட்டு போல் சரிந்தன. 48,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். மீட்பு பணிகளில் உலகம் முழுவதும் பல நாடுகள் ஈடுபட்டன. இன்னும் மீட்பு பணிகள் முழுவதுமாக முடிவடையாத நிலையில் அதனை சுற்றி பல பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது.

நிலநடுக்கம்

இதனால் மக்கள் இன்னும் அச்சத்தில் இருந்து மீளவில்லை. இன்று தெற்கு பிலிப்பைன்ஸில்  6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மிண்டனாவ் தீவில் தாவோ டி ஓரோ மாகாணம் அருகே இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

பூமிக்கு அடியில் 8 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆழமற்ற நிலநடுக்கங்கள் அதிக தீங்கு விளைவிக்கும் என்பதால், சேதம் குறித்து உடனடியாக உறுதியான அறிக்கைகள் எதுவும் இல்லை.  

லடாக், ஜம்மு – காஷ்மீரில்  நிலநடுக்கம்!
 தொடர்ந்து ஆப்கானிஸ்தான், இந்தோனேசியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை நாடுகள் தொடர்ந்து நில நடுக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில், தெற்கு பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் குறித்து  அமெரிக்க புவியியல் ஆய்வுமையம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் சான் மரியானோவிலிருந்து தென்கிழக்கில் 4 கி.மீ தூரத்தில் நிலநடுக்கம்  6.0 ரிக்டர் ஆக பதிவாகியுள்ளது.  இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை  என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web