இம்மாத இறுதியில் இன்னொரு புயல் சின்னம்... பருவ மழை ஜனவரி வரையில் நீடிக்க வாய்ப்பு!

 
புயல் கடற்கரை மழை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் சூழலில், இன்று (சனிக்கிழமை) மற்றும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) கிழக்குத் திசைக் காற்றின் ஊடுருவலால் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இம்மாத இறுதியில் புதிய புயல் சின்னம் உருவாகி நல்ல மழையைக் கொடுக்கும் எனவும் தனியார் வானிலை ஆய்வாளர் கணிக்கிறார்.

மழை

தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமசந்திரன் அவர்கள் இந்த மாதம் ஏற்படவுள்ள மழை நிகழ்வுகள் குறித்துத் தெரிவித்துள்ளார். அதில், டிசம்பர் 10 முதல் 12 வரை கிழக்கு திசைக் காற்றினால் மீண்டும் மழைக்கான சூழல் உருவாகிறது. அப்போது கடலோர மாவட்டங்களில் கனமழை முதல் மிகக் கனமழை வரை பதிவாக வாய்ப்புள்ளது. டிசம்பர் 15-க்குப் பிறகு கடல் சார்ந்த அலைவுகள் சாதகமாக அமைவதால், அடுத்தடுத்த மழை நிகழ்வுகள் உருவாகிப் பருவமழை தீவிரம் அடைவதற்கான சூழல் அதிகம் உள்ளது.

டிசம்பர் 15-க்குப் பின்னர் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பைக் கொடுக்கும். டிசம்பர் 20-ஆம் தேதி அடுத்த தாழ்வுப் பகுதி உருவாகி சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான கடலோரப் பகுதிகளிலும் மழைக்கான வாய்ப்பை அளிக்கும்.

மழை விடுமுறை

வடகிழக்குப் பருவமழைக் காலத்தின் மூன்றாவது புயல் சின்னம் தெற்கு வங்கக் கடலில் டிசம்பர் 23-ஆம் தேதிக்குப் பிறகு உருவாவதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது. இது சமீபத்தில் கடந்து சென்ற 'தித்வா' புயலைப் போலவே நல்ல மழையைக் கொடுக்கக்கூடிய புயல் சின்னமாகவே இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பருவமழையைப் பொறுத்தவரையில், ஜனவரி முதல் வாரம் வரை நீடிக்க வாய்ப்பு இருப்பதாக அந்த ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!