தேச விரோதமா? ஐ.பி.எல். ஏலத்தை வெளிநாட்டில் நடத்துவது ஏன்? - பி.சி.சி.ஐ.க்கு காங்கிரஸ் கட்சி சரமாரி கேள்வி!
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் மினி ஏலம் இன்று (செவ்வாய்க்கிழமை) அபுதாபியில் நடைபெறுகிறது. இந்த முக்கிய நிகழ்வை இந்தியாவில் நடத்தாமல் வெளிநாட்டிற்குக் கொண்டு சென்றது ஏன் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு (BCCI) காங்கிரஸ் கட்சிப் பகிரங்கமாகக் கேள்வி எழுப்பியுள்ளது.

இது தொடர்பாகக் காங்கிரஸின் கர்நாடக மாநில அமைச்சர் பிரியங்க் கார்கே அவர்கள், பி.சி.சி.ஐ.யின் இந்த முடிவுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். "ஐபிஎல் ஏலத்தை வெளிநாட்டில் நடத்துவது ஏன்? இந்தியாவில் அரங்கங்களே இல்லையா?" என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், "இதே செயலை வேறு யாராவது செய்திருந்தால், உடனே அவர்களை ‘தேச விரோதிகள்’ என முத்திரை குத்திவிடுவார்கள்," என்றும் பிரியங்க் கார்கே தெரிவித்துள்ளார். இதன் மூலம், பா.ஜ.க. ஆளும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பி.சி.சி.ஐ.யின் முடிவில் அவர் அரசியல் நோக்கம் இருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்றைய ஐ.பி.எல். ஏலப்பட்டியலில் 240 இந்தியர்கள் மற்றும் 110 வெளிநாட்டவர்கள் உட்பட மொத்தம் 350 வீரர்கள் இடம் பெற்றிருந்தனர். இப்போது மேலும் 19 வீரர்கள் கூடுதலாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் இருந்து 77 வீரர்கள் வரை ஏலத்தில் எடுக்கப்பட உள்ளனர். ஏலத்தில் ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக ரூ.125 கோடி செலவிட அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
