புத்தாண்டு பரிசு… அந்தியோதயா ரயில் சீர்காழியில் நின்று செல்லும்...

 
 சிறப்பு ரயில்
 

சீர்காழி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியது. தாம்பரம்–நாகர்கோவில் இடையே இயக்கப்படும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ், ஜனவரி 1 முதல் சீர்காழி ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு சீர்காழி மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரயில் முன்பதிவு

ஏழைகளின் ரதம் என அழைக்கப்படும் அந்தியோதயா ரயில், முன்பதிவு இல்லாத பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது. சென்னை மற்றும் தென் மாவட்டங்களுக்கு கல்வி, மருத்துவம், வணிக தேவைகளுக்காக தினமும் பயணம் செய்யும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு இது பெரும் உதவியாக இருக்கும். பல ஆண்டுகளாக சங்கங்கள், வர்த்தக அமைப்புகள் நடத்திய போராட்டங்களுக்கும், தொடர்ந்த மனுக்களுக்கும் கிடைத்த பலனாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

எக்ஸ்பிரஸ் ரயில்

புதிய அட்டவணைப்படி தாம்பரம்–நாகர்கோவில் அந்தியோதயா நள்ளிரவு 2.45 மணிக்கும், நாகர்கோவில்–தாம்பரம் அந்தியோதயா நள்ளிரவு 12.08 மணிக்கும் சீர்காழியில் நின்று செல்லும். இந்த இரவு நேர நிறுத்தம் பயணிகளுக்கு வரப்பிரசாதமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட நாள் கனவு நனவானதால், புத்தாண்டை சீர்காழி மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!