அஜீத்குமாரை சித்தரவதை செய்ய உத்தரவிட்டது யார்? அன்புமணி சராமாரி கேள்வி!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் காவல்துறை விசாரணையில் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கின் விசாரணை சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகள், அஜித்குமாரின் விவகாரத்தில் காவலர்களுக்கு உத்தரவிட்ட உயரதிகாரி யார் என கேள்வியை எழுப்பி வருகின்றன. இந்நிலையில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் அந்த அதிகாரி யார்? என தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
இது குறித்து அன்புமணி தனது எக்ஸ் தளத்தில் ”சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவலர்களால் கொல்லப்பட்ட அஜித்குமார் என்ற இளைஞரை சித்திரவதை செய்யும்படி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்குக் கூட தகவல் தெரிவிக்காமல் காவல்துறை துணை கண்காணிப்பாளரைத் தொடர்பு கொண்டு காவல்துறை உயரதிகாரி ஒருவர் ஆணையிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அந்த அதிகாரி யார்? என தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும். இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டு விட்டாலும் தமிழகக் காவல்துறையை சீர்திருத்த இத்தகைய அதிகாரிகளை அடையாளம் கண்டு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!