500 இளநீர்களை பல்லால் உரித்து , தலையில் உடைத்து விநோத வழிபாடு... !

 
அனுமன் ஜெயந்தி

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில்  ராமதூத யோக ஆஞ்சநேயர் கோவில் பிரசித்தி பெற்றது. இங்கு  அனுமன் ஜெயந்தி  மிக கோலாகலமாக ஆண்டு தோறும் கொண்டாடப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபராதனை நடத்தப்பட்டது .

அனுமன் ஜெயந்தி

 இதனை நேரில் காண தமிழகத்தின்  பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.ஆஞ்சநேயருக்கு சிறப்பு  அபிஷேக ஆராதனைகள், பூஜைகள் நிகழ்த்தப்பட்டது.  இந்த  வழிபாட்டில்   கோவில் முன்பு இளநீர்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தன.  

அனுமன்

இதில் இருந்த 500 இளநீர்களை அருள் வந்த அனுமன் பக்தர்கள்  தங்களின் பல்லால்  உரித்து, தலையில் உடைத்து  அங்கு வந்திருந்த பக்தர்களுக்கு கொடுத்தனர். இவர்கள் ஆஞ்சநேயர் போல் பாவனையில் இளநீர்களை உரித்து உடைத்து  உரித்த இளநீரை பக்தர்களுக்கு கொடுத்தனர்.  குறிப்பாக  குழந்தை வரம் வேண்டி வந்த பெண்கள் மடி ஏந்தி அந்த இளநீரை பெற்றுக் கொண்டனர். இந்த காட்சி அங்கிருந்த  பக்தர்களிடையே பக்தி  பரவசத்தை  ஏற்படுத்தியது.

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web