அதிர்ச்சி வீடியோ... அடுக்கு மாடி கட்டிடத்தில் திடீர் தீவிபத்து... ஜன்னல் வழியே குதித்து தப்பியோடிய குடியிருப்புவாசிகள்!

 
அடுக்கு மாடி கட்டிடத்தில் திடீர் தீவிபத்து

உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டா நகரில் செக்டார் 18 பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில்  திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், பலரும் தங்களது உயிரை காக்க அடுக்குமாடி வீடுகளில் உள்ள ஜன்னல்கள் வழியாக கீழே குதிக்க முயற்சிக்கின்றனர்.  கட்டிடத்தை சுற்றி கருப்பு புகை சூழ்ந்துள்ளதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.



இச்சம்பவம் குறித்து  அறிந்த தீயணைப்பு படையினர் உடனடியாக விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இந்த தீ விபத்தில் எந்தவித உயிரிழப்போ அல்லது காயம் ஏற்பட்டதாகவோ தகவல் வெளியாகவில்லை.  
இந்த தீ விபத்தால் அப்பகுதியில் உள்ள சாலைகளில் சில மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.  இதுபோலவே ஒரு நாளுக்கு முன்   திங்கட்கிழமை அன்று கிரேட்டர் நொய்டாவின் எக்கோடெக் 3, ஈகோ டெக் 3 ஆகிய 2 பகுதிகளில் உள்ள குளிர்பானம் தயாரிக்கும் தொழிற்சாலைகளிலும் தீ விபத்து ஏற்பட்டது  குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web