பகீர்... மளமளவென இடிந்து விழுந்த குடியிருப்புகள், 19 பேர் பலி, 16 பேர் படுகாயம்!
மொராக்கோ நாட்டின் 3-ஆவது பெரிய நகரமான ஃபெஸில், நள்ளிரவில் திடீரென இரண்டு வேறு வேறு அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்து விழுந்து 19 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று (டிச.9) இரவு 4 மாடிகள் கொண்ட கட்டடங்கள் இடிந்து விழுந்ததில், அவற்றில் வசித்து வந்த 8 குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விபத்தில் 16 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கட்டடங்கள் இடிந்ததற்கான காரணம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகவில்லை. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அச்சம் நிலவுகிறது.
மொராக்கோவில் இதுபோன்ற சம்பவங்கள் புதிதல்ல. கடந்த மே மாதத்திலும் கட்டட விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். பழமையான கட்டடங்கள் அதிகம் உள்ள நாடான மொராக்கோவில், புதிய கட்டுமானங்களில் விதிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்து வருகிறது. 2030 ஃபிஃபா உலகக் கோப்பை போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ள ஃபெஸ் நகரில் இந்த விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
