ஐபோன் ஏற்றுமதியில் இந்தியா 'மாஸ்' சாதனை - ரூ.4.51 லட்சம் கோடியைத் தொட்டது ஆப்பிள் ஏற்றுமதி!

 
ஐபோன்

'மேக் இன் இந்தியா' மற்றும் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகைத் திட்டத்தின் அதிரடி விளைவாக, மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியா உலக நாடுகளைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

கடந்த 2025-ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் இருந்து ரூ.4.51 லட்சம் கோடி மதிப்புள்ள ஐபோன்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. கடந்த 11 ஆண்டுகளில் இந்தியாவின் மின்னணுப் பொருட்கள் உற்பத்தி 6 மடங்கு அதிகரித்துள்ளது. இதே காலத்தில் ஏற்றுமதி மட்டும் 8 மடங்கு உயர்ந்துள்ளது.

ஐபோன்

ஆப்பிள் நிறுவனம் மட்டும் இந்தியாவில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 3.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளது. ஒட்டுமொத்த மின்னணுத் துறையில் 25 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர்.

இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில், அதிகம் ஏற்றுமதி செய்யப்படும் முதல் 3 பொருட்களில் ஒன்றாக 'மின்னணுப் பொருட்கள்' இடம் பிடித்துள்ளன. இந்த ஆண்டு முதல் இந்தியாவில் 4 செமி கண்டக்டர் தொழிற்சாலைகள் செயல்படத் தொடங்க உள்ளன. இது இந்தியாவின் சிப் (Chip) தேவையைப் பூர்த்தி செய்ய உதவும்.

ஆன்லைனில் ஆர்டர்  செய்த ஐபோன்!! பார்சலில் பகீர் அதிர்ச்சி!!

ஆப்பிள் நிறுவனத்திற்கு தற்போது இந்தியாவில் 5 பிரம்மாண்ட ஐபோன் தொழிற்சாலைகள் உள்ளன. அவை முழுவீச்சில் உற்பத்தியை மேற்கொண்டு வருகின்றன. பிரதமர் மோடியின் தொலைநோக்குத் தலைமையால், இந்தியா உலகின் 'மின்னணு உற்பத்தி மையமாக' (Electronic Hub) மாறி வருவதாக அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!