சஞ்சார் சாதி செயலிக்கு மத்திய அரசுக்கு எதிராக ஆப்பிள்–கூகுள் கடும் எதிர்ப்பு!

 
சஞ்சார் சாதி
 

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் புதிய செல்‌போன்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் போன்களில் ‘சஞ்சார் சாதி’ செயலியை முன்கூட்டியே கட்டாயமாக நிறுவ வேண்டும் என மத்திய தொலைத்தொடர்பு துறை உத்தரவிட்டது. தொலைத்தொடர்பு சேவைகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்கும் நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டது என அரசு தெரிவித்துள்ளது. ஆனால், இது தனிநபர் உரிமையை மீறும் முயற்சி என பல தரப்பினரிடமும், எதிர்க்கட்சி வட்டாரங்களிலும் கடும் விமர்சனங்கள் எழுந்தன.

தனியுரிமை மீறல் குற்றச்சாட்டுகள் அதிகரித்ததைத் தொடர்ந்து, செயலியை வேண்டாம் என்றால் பயனர்கள் தாங்களே அதை அழித்துவிடலாம் என மத்திய அமைச்சர் விளக்கம் வழங்கினார். இருப்பினும், இந்த செயலியை போன்களில் கட்டாயமாக இடுவது தேவையா என்ற சந்தேகங்கள் பொதுமக்கள் மட்டுமன்றிக் தொழில்நுட்ப வல்லுநர்களிடமும் தொடர்ந்து எழுந்து வருகின்றன.

இந்த நிலையில், ஆப்பிள் மற்றும் கூகுள் ஆகிய நிறுவனங்கள் மத்திய அரசின் இந்த கட்டாய உத்தரவுக்கு நேரடியாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பொதுமக்கள் விரும்பினால் செயலியை தாங்களே பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்; அதற்கு மத்திய அரசு ஏன் முன் நிறுவலை கட்டாயமாக்குகிறது? என இரு நிறுவனங்களும் கேள்வி எழுப்பியுள்ளன. மேலும், தங்கள் எதிர்ப்பை அதிகாரப்பூர்வ கடிதம் மூலம் மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!