மே 29 முதல் மகளிர் உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு!

 
மகளிர் உரிமைத் தொகை

தமிழகத்தில் 2023 செப்டம்பர் 15 ம் தேதி அண்ணா பிறந்தநாளில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ் மாதந்தோறும் பெண்களுக்கு ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. 

தமிழகத்தில் தற்போது 2 கோடியே 26 லட்சத்து 14 ஆயிரத்து 128 குடும்ப அட்டைகள் உள்ளநிலையில் 1 கோடியே 12 லட்சம் பெண்கள் உரிமைத்தொகை பெற முடியவில்லை. இந்நிலையில் தகுதியான விடுபட்ட பெண்களுக்கு உரிமைத்தொகை வழங்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.  

இந்த அறிவிப்பை நடைமுறைப்படுத்தும் வகையில் கலைஞர் மகளிர் உதவித்தொகை பெறாமல் இருக்கும் விடுபட்ட பெண்கள் மே 29 முதல்  விண்ணப்பம் செய்யலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.அதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது