12 வழித்தடங்களில் மின் பேருந்துகளை இயக்க விண்ணப்பங்கள் வரவேற்பு... ஆட்சியர் தகவல்!

 
மினி பேருந்து

தூத்துக்குடி மற்றும் கோவில்பட்டி வட்டாரப்போக்குவரத்து அலுவலகத்திற்குட்பட்ட 12 வழித்தடங்களுக்கும் மற்றும் 1 வழித்தட நீட்டிப்பு (Migration) வழித்தடத்திற்கும் சிற்றுந்துகளை இயக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "புதிதாக கண்டறியப்பட்ட தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்குட்பட்ட 11 புதிய வழித்தடங்களுக்கும், கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்குட்பட்ட 1 புதிய வழித்தடம் மற்றும் 1 வழித்தட நீட்டிப்பு (Migration) வழித்தடத்திற்கும் சிற்றுந்துகளை இயக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மினி பஸ்

விண்ணப்பிக்க விரும்புவோர் புதிய மினிப்பேருந்துக்கான SCPA விண்ணப்பப்படிவத்தினை Parivahan மூலமாக விண்ணப்பித்து ஆன்லைனில் கட்டணம் ரூ.1500+100+1600/- செலுத்தி விண்ணப்பப்படிவத்தினை பூர்த்தி செய்து விலாசச்சான்றுக்கான ஆவணத்துடன் உரிய இணைப்புகளுடன் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சம்பந்தப்பட்ட வட்டாரப்போக்குவரத்து அலுவலகங்களில் 23.04.2025-க்குள் நேரில் சமர்பிக்க தெரிவிக்கப்படுகிறது.

தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்குட்பட்ட வழித்தடங்களான ஸ்ரீராம் இன்ஜினியரிங் (மடத்தூர்) முதல் சுயம்புலிங்கம் அய்யனார் கோவில் (ஜோதி நகர்), சுயம்புலிங்கம் அய்யனார் கோவில் (ஜோதி நகர்) முதல் ஸ்ரீராம் இன்ஜினியரிங் (மடத்தூர்), கலெக்டர் ஆபிஸ் முதல் மொட்ட கோபுரம், மொட்ட கோபுரம் முதல் கலெக்டர் ஆபிஸ், பழைய பேருந்து நிலையம் முதல் டேவிஸ் புரம், டேவிஸ் புரம் முதல் பழைய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் முதல் வீரநாயக்கன் தட்டு, பிரம்மா டிரான்ஸ்போர்ட் டேவிஸ்புரம் முதல் பாலிடெக்னிக் காலேஜ், பாலிடெக்னிக் காலேஜ் முதல் பிரம்மா டிரான்ஸ்போர்ட் டேவிஸ்புரம், ஹார்டிகல்சர்ஸ் டிடி ஆபிஸ் முதல் பிரம்மா டிரான்ஸ்போர்ட் டேவிஸ்புரம், பிரம்மா டிரான்ஸ்போர்ட் டேவிஸ்புரம் முதல் ஹார்டிகல்சர்ஸ் டிடி ஆபிஸ் ஆகிய 11 வழித்தடங்களுக்கும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மினி பேருந்து

மேலும், கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்குட்பட்ட வழித்தடங்களான சிந்தலைக்கரை முதல் ஈராட்சி, வழித்தட நீட்டிப்பு (Migration) வழித்தடம் செட்டிக்குறிச்சி முதல் கயத்தாறு பேருந்து நிலையம் வரை ஆகிய 2 வழித்தடங்களுக்கும் பின்வரும் படிவம் மற்றம் ஆவணங்கள் SCPA Form with fees of Rs. 1500+100+600/-, Address evidence, Road worthy certificate from A.E/D.E. Highways, Tentative timings, Route –Map/Sketch, Solvency Certificate ஆகியவற்றுடன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?