இன்றே கடைசி!! தனியார் பள்ளிகளில் இலவச கல்விக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?!

 
இலவச கட்டாய கல்வி

இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் ஏழை குழந்தைகள் சேர்க்கப்படுவது வாடிக்கையாக இருந்து வருகிறது. அவர்களுக்கான கல்வி கட்டணம் அரசின் மூலம் செலுத்தப்படும் இதுவரை இந்த திட்டத்தின் கீழ் 3 லட்சத்து 98 ஆயிரம் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.  

இலவச கட்டாய கல்வி

இதன் தொடர்ச்சியாக நடப்பு ஆண்டில் 7,738 தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களின் கீழ் சுமார் 85000 மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பப்பதிவு ஏப்ரல் 20ம் தேதி தொடங்கியது. இத்திட்டத்தின் கீழ் இதுவரை ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 872 பேர் விண்ணப்பப்பதிவு செய்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  இதற்கான விண்ணப்பப் பதிவு இன்று மே 18ம் தேதி வியாழக்கிழமை நிறைவு பெற உள்ளது.

மாணவிகள்

விருப்பம் உள்ள பெற்றோர்கள் rte.tnschools.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.இந்தத் திட்டத்தில் எல்கேஜி அல்லது ஒன்றாம் வகுப்பில் சேருபவா்கள் 8-ஆம் வகுப்பு வரை கட்டணம் செலுத்தாமல் இலவசமாக படிக்கலாம். தமிழகத்தில் 2013 முதல் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் இதுவரை 3.98 லட்சம் குழந்தைகள் தனியாா் பள்ளிகளில் படித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web