இன்று முதல் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்! விண்ணப்பத்தில் இதையெல்லாம் மறக்காதீங்க.. எப்படி விண்ணப்பிப்பது?!

 
நீட் தேர்வு

இன்று முதல் மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வுக்கு மானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. பன்னிரெண்டாம் வகுப்பு முடித்திருக்கும் மாணவர்கள், எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நீட்  நுழைவுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே தேர்வு செய்யப்படுகிறார்கள்.

நீட் தேர்வு மூலமாக மாணவர்களின் சேர்க்கை நடைப்பெறுவதற்கு பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும், தமிழகம் தொடர்ந்து எதிர்த்து வருகிறது. நீட் தேர்வினால், தமிழகத்தில் பல மாணவர்கள் தற்கொலை முடிவுகளையும் நாடியுள்ளனர். பல உயிர்களை பலி வாங்கினாலும், நீட் தேர்வு விலக்குதல் என்பது இனி சாத்தியமில்லாதது தான். அரசியல் கட்சிகள், வழக்கம் போல இதிலும் தங்களது அரசியல் லாபத்தை அறுவடை செய்கின்றன.

நீட் நுழைவுத்  தேர்வு

நீட் விலக்கு குறித்து யோசிக்காமல், மாணவர்கள் நீட் தேர்வுக்கு ஆரம்பத்தில் இருந்தே தயாராவது மட்டுமே அதற்கான தீர்வாகும். ஒவ்வொரு வருடமும்  நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. நடப்பாண்டுக்கான நீட் தகுதித் தேர்வு தமிழ், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட 13 மொழிகளில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் மே மாதம் 7ம் தேதி, இளநிலை நீட் தேர்வு  நேரடி முறையில் நடைபெற உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு இன்று முதல் துவங்கியுள்ளது.  இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேசிய தேர்வு முகமை இன்று காலை வெளியிட உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து மாணவர்கள், பெற்றோர் இந்த அறிவிப்பை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர். இதுகுறித்த கூடுதல் தகவல்களை nta.ac.in, neet.nta.nic.in ஆகிய இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வு

மாணவர்கள், இணையதளத்தைப் பார்வையிட்டு, தங்களது கல்வி விபரங்களையும், ஸ்கேன் செய்யப்பட்ட ஆவணங்களையும் பதிவேற்ற வேண்டும். அதன் பின்னர், தங்களது விண்ணப்பதுடன், விண்ணப்பக் கட்டணத்தையும் செலுத்தி, படிவத்தை சமர்பிக்க வேண்டும்.  விண்ணப்பத்தில், உங்களது பிறந்த தேதி, பாலினம், செல்போன் எண், மின்னஞ்சல் முகவரி போன்ற விவரங்கள் கேட்கப்பட்டிருக்கும். இவற்றைப் பதிவு செய்த பின்னர், விண்ணப்பத்தை செமேமித்து, ஒரு முறை மீண்டும் கவனமாக படித்து  பார்த்து விட்டு, அதன் பின்னர் விண்ணப்பத்தை சமர்பித்து கட்டணம் செலுத்துங்கள். அதே சமயம், சமர்பித்த விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, சேமித்து வைத்துக் கொள்ளவும்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web