இன்று முதல் விண்ணப்பிக்கலாம்... 10வது தேர்ச்சியடைந்த மாணவர்களுக்கு அறிவிப்பு!

உங்க வாழ்க்கையில் பத்தாவது தான் முக்கியமான தேர்வு. இது தான் எல்லாவற்றுக்கும் அடிப்படை என உங்கள் ஆசிரியர்கள், பெற்றோர், உறவினர்னு எல்லாரும் கடந்த வருஷம் முழுவதும் சொல்லி இருப்பாங்க. அதெல்லாமே நிஜம் தான். 10வது வகுப்பு பிறகு தான் நீங்க என்னவாகப் போறீங்கன்னு நினைச்சிருக்கீங்களோ அதை நோக்கி நகர்கிற நேரம். தொழிற்கல்வியா, இல்லை மேல்நிலை வகுப்பா என முடிவெடுப்பதும், மேல்நிலை வகுப்புகளில் என்ன குரூப் எடுக்கலாம் என முடிவெடுக்க வேண்டிய நேரமும் இது தான். இந்நிலையில், இன்று முதல் பாலிடெக்னிக் தொழில் நுட்ப கல்லூரிகளில் சேர்வதற்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தீர்க்கமான மனநிலையில், நன்கு சிந்தித்து முடிவெடுங்க.
அதன்படி பாலிடெக்னிக் பட்டய படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு இன்று முதல் தொடங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலிடெக்னிக் பட்டய படிப்புகளுக்கு விண்ணப்பிக்க http://tnpoly.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் எனவும் பாலிடெக்னிக் படிப்புகளில் நேரடியாக 2ம் ஆண்டு சேரவும் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் எனவும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
தேர்ச்சி விகிதத்தை பொறுத்தவரை மாநில அளவில் பெரம்பலூர் மாவட்டம் முதலிடத்திலும், சிவகங்கை மாவட்டம் 2ம் இடத்திலும், விருதுநகர் மாவட்டம் 3 ம் இடத்தையும் பிடித்துள்ளது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 23,971 மாணவ-மாணவிகள் தோல்வி அடைந்துள்ளனர். இந்நிலையில், 10ம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு உடனடியாக மறுதேர்வு எழுத துணைத்தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இந்த துணை தேர்வில் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் உடனடியாக தாங்கள் படித்த பள்ளிகள் அல்லது தேர்வு மையத்தை அணுகலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிச்சுபாருங்க... ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி! வீடியோ!
அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!