உடனே விண்ணப்பீங்க... 615 பணியிடங்கள்... நேர்முகத் தேர்வு கிடையாது... டிஎன்பிஎஸ்சி அதிரடி அறிவிப்பு!

 
டிஎன்பிஎஸ்சி
தமிழகத்தில் அரசு பணிகளுக்கான குரூப் 4 தேர்வு அறிவிப்பு வெளியான நிலையில், இன்று 615 பணியிடங்கள் கொண்ட ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி  இந்த தேர்வின் மூலம் உதவிப் பொறியாளர், மின்னியல், வேளாண் பொறியியல், அமைப்பியல் உள்ளிட்ட 47 பதவிகளுக்கான 615 பணியிடங்களை நிரப்ப TNPSC முடிவு செய்துள்ளது.  

இதுகுறித்து TNPSC வெளியிட்டுள்ள அறிவிப்பில், தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் 27-05-2025 முதல் 25-06-2025 வரை இணையவழியில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். தேர்வு கட்டணம் UPI மூலமாகவும் செலுத்தலாம். கணினி வழி தேர்வு 04-08-2025 முதல் 10-08-2025 வரை நடைபெறும்.

டி.என்.பி.எஸ்.சி
ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வுகள் (நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்) 2024-ம் ஆண்டு அறிவிப்பில், இரண்டு நிதியாண்டுகளுக்கான 1236 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன ஒரு நிதியாண்டிற்கு சராசரியாக 618 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.  அதன்படி உதவிப் பொறியாளர், ஜூனியர் எலக்ட்ரிக்கல் இன்ஸ்பெக்டர், லைப்ரரியன், கம்ப்யூட்டர் ப்ரோக்ராமர், ஜூனியர் பிளானர், புள்ளியல் உதவியாளர் என 47 வகையான பணியிடங்களுக்கு 617 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். 

இந்த பணியிடங்களுக்கு பொறியியல் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை திருத்துவதற்கு 29-06-2025 முதல் 10-08-2025 வரை அவகாசம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வித் தகுதியாக  தமிழ் தகுதி தேர்வு மற்றும் துறை சார்ந்த பாடப்பிரிவுகளில் எழுத்து தேர்வு நடைபெறும். இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றால் நேர்முகத் தேர்வு இல்லாமலேயே குடிநீர் வடிகால் வாரியம் உட்பட பல துறைகளில் பொறியாளராக பணியாற்ற முடியும் எனத் தெரிவித்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது