ரஜினிகாந்த் அயோத்தி படத்திற்கு பாராட்டு!! வைரலாகும் ட்வீட்!!

 
ரஜினி சசிகுமார்

தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் ரஜினிகாந்த்  நல்ல படங்கள் வெளியானால் படத்தை பார்த்துவிட்டு உடனே படக்குழுவை பாராட்டி விடுவார். இதே போல் கடந்த சில நாட்களுக்கு முன்பு கூடி நடிகர்  சூரி கதாநாயகனாக  நடித்த  விடுதலை திரைப்படத்தை பார்த்து விட்டு படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டுக்களை தெரிவித்தார். 



அந்த வரிசையில்  தற்போது இயக்குனர் மந்திர மூர்த்தி  இயக்கத்தில் சசிகுமார், யஷ்பால் சர்மா, போஸ் வெங்கட், புகழ் ஆகியோர் நடிப்பில்  மார்ச் 3ம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘அயோத்தி’ படத்தை பார்த்துவிட்டு பாராட்டி ரஜினிகாந்த் ட்வீட் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து  ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பதிவில்   ” அயோத்தி… நண்பர் சசிகுமாருக்கு ரொம்ப நாட்களுக்குப் பிறகு அருமையான கருத்துள்ள ஒரு வெற்றிப் படம். முதல் படத்திலேயே தான் ஒரு தலை சிறந்த இயக்குநர் என்று நிரூபித்திருக்கிறார் ஆர். மந்திரமூர்த்தி.

ரஜினி சசிகுமார்

தயாரிப்பாளருக்கு என்னுடைய பாராட்டுகளும், வாழ்த்துகளும்” என பதிவிட்டுள்ளார். ரஜினி காந்த்தின் இந்த பதிவு பெரும் வைரலாகி வருகிறது. அயோத்தி திரைப்படம் கடந்த வாரம் ஜீ ஓடிடி தளத்தில் வெளியான நிலையில் இந்த பாராட்டுக்களை பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சசிகுமார் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தில் அவருடன் அவருக்கு நண்பராக நடித்திருந்தார் .

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web