ஏப்ரல் 11ம் தேதி உள்ளூர் விடுமுறை!

தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் பங்குனி உத்திர திருநாளை முன்னிட்டு ஏப்ரல் 11ம் தேதி நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் பங்குனி உத்திர திருநாள் ஏப்ரல் 11ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று கொண்டாடப்பட உள்ளது.
இதை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் அரசு பொதுத் தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும் நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிப்பை திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் சுகுமார் அறிவித்துள்ளார்.
இந்த நாளில் அரசு பொதுத் தேர்வுகள் இருப்பின் அவர்களுக்கு இந்த விடுமுறை அறிவிப்பு பொருந்தாது. இந்நாளில் நாளில் நடைபெறும் அனைத்து பொதுத்தேர்வுகளும் எவ்வித மாறுதலுமின்றி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. வங்கிகளுக்கு இவ்விடுமுறை பொருந்தாது. இம்மாவட்ட கருவூலம் மற்றும் அனைத்து சார்நிலைக் கருவூலங்களும் குறைந்தபட்ச பணியாளர்களை கொண்டு செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 4வது சனிக்கிழமை பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!