ஏப்ரல் 18,19 தொடர்ந்து இரு தினங்களுக்கு உள்ளூர் விடுமுறை! திருச்சி மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

 
உள்ளூர் விடுமுறை

நாளை ஏப்ரல் 18ம் தேதியும், நாளை மறு தினம் ஏப்ரல் 19ம் தேதியும் திருச்சி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இந்த இரு தினங்களுக்கும் திருச்சியில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு விடுமுறைகள் தவிர்த்து உள்ளூர் பண்டிகைகள் திருவிழாக்களுக்கு உள்ளூர்  விடுமுறைகளும் அறிவிக்கப்படுவதுண்டு.  திருச்சி மாவட்டத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆலயம்  சமயபுரம் மாரியம்மன் கோவில்.இங்கு வருடம் முழுவதும் பண்டிகைகள், திருவிழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். அந்த வகையில் நடப்பாண்டுக்கான  சித்திரை தேர் திருவிழா நாளை ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ளது.

இன்று 23 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!!

அதே போல் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் சித்திரை தேர் திருவிழா நாளை மறு தினம் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதனை நேரில் கண்டுகளிக்க  தமிழகம் முழுவதும் மட்டும் இல்லாமல் பல்வேறு ஊர்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கமாக இருந்து வருகிறது. இதன் அடிப்படையில்  திருச்சி மாவட்ட ஆட்சியர் திரு. பிரதீப் குமார் அவர்கள் திருச்சி மாவட்டத்திற்கு ஏப்ரல் 18 மற்றும் 19 ஆகிய 2 நாட்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளார். இந்த உள்ளூர் விடுமுறை காரணமாக அன்றைய தினம் அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் விடுமுறை  அளிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை

அதே நேரத்தில் தேர்வு நடைபெறும்  பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இந்த விடுமுறை அறிவிப்பு பொருந்தாது எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 18 மற்றும் 19ம் தேதிகளில்  அரசு பாதுகாப்பு கருதி  அவசரப் பணிகளை கவனிக்கும் வகையில் அரசு அலுவலகங்கள், கருவூலகம் மற்றும் சார்நிலை கருவூலங்களை சேர்ந்த குறைந்தபட்ச பணியாளர்கள் பணிபுரிவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாளுக்கு பதிலாக முறையை ஏப்ரல் 29 மற்றும் மே 13ம் தேதி பணி நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web