நாகாலாந்தில் சர்வதேச இசை ஸ்டுடியோ - ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு!

 
ஏ.ஆர்.ரகுமான்

நாகாலாந்து மாநிலத்தின் பாரம்பரிய இசை மற்றும் கலாசாரத்தை உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பத்துடன் இணைக்கும் வகையில், அங்கு ‘நாகா சர்வதேச ஸ்டுடியோ’ (Naga International Studio) அமைக்கப்பட உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் நாகாலாந்து முதல்வர் நெய்பியு ரியோ ஆகியோர் நேற்று (டிசம்பர் 26, 2025) வெளியிட்டனர்.

நாகாலாந்து தலைநகர் கோஹிமாவில் அமையவுள்ள இந்த பிரம்மாண்ட ஸ்டுடியோ, ஏ.ஆர்.ரகுமானின் நேரடி மேற்பார்வையில் (Concept by A.R. Rahman) உருவாக்கப்பட உள்ளது. இதில் இடம்பெறவுள்ள முக்கிய வசதிகள்: அதிநவீன ஒலிப்பதிவு கூடங்கள், கலைநிகழ்ச்சிகளுக்கான பிரத்யேக அரங்கம், உலகத்தரம் வாய்ந்த இசைப் பணிகளுக்குத் தேவையான அதிநவீன உள்கட்டமைப்புகள்.

ஏ.ஆர்.ரஹ்மான்

இது குறித்து ஏ.ஆர்.ரகுமான் கூறுகையில், “நாகாலாந்தின் இசை கலாசாரத்தில் ஆழமாக வேரூன்றிய ஒரு அரிய இசை ஆன்மா உள்ளது. அந்த பாரம்பரியமும், நவீன படைப்பாற்றலும் சங்கமிக்கும் இடமாக இந்த ஸ்டுடியோ அமையும். இதன் மூலம் வடகிழக்கு மாநிலங்களின் இளம் கலைஞர்கள் உலகத்தரம் வாய்ந்த இசையை உருவாக்கி, சர்வதேச அரங்கில் ஒலிக்கச் செய்ய முடியும்,” எனத் தெரிவித்தார். மேலும், இந்த கனவு நனவாக உறுதுணையாக இருந்த முதல்வர் நெய்பியு ரியோ மற்றும் நாகாலாந்து அரசுக்கும் அவர் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

இந்த ஸ்டுடியோவை ப்ளூக்யூப் ஆர்கிடெக்ட்ஸ் மற்றும் ரியாஸ்தீன் ரியான் ஆகியோர் வடிவமைத்துள்ளனர். நாகாலாந்து அரசின் இசை மற்றும் கலைப்படைப்புக்கான சிறப்புப் பிரிவு (TAFMA) மற்றும் முதலீடு மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IDAN) ஆகியவற்றுடன் இணைந்து இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

வடகிழக்கு இந்தியாவின் கலைத் திறமையை உலகிற்குப் பறைசாற்றும் ஒரு மிக முக்கிய மைல்கல்லாக இந்த ஸ்டுடியோ பார்க்கப்படுகிறது. ஏ.ஆர்.ரகுமான் ஏற்கனவே நாகாலாந்து இசைக் கலைஞர்களுக்குப் பல்வேறு பயிற்சிகளையும், மேடைகளையும் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!