13ம் நூற்றாண்டின் கல்வெட்டுடன் கூடிய கிணற்றினை பாதுகாத்திட தொல்லியல் ஆர்வலர் கோரிக்கை!

தூத்துக்குடி மடத்தூரில் காணப்படும் 13ம் நூற்றாண்டின் கல்வெட்டோடு கூடிய கமலை கிணற்றினை பாதுகாத்திட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கு தொல்லியல் ஆர்வலர் பெ.ராஜேஷ் மனு அனுப்பியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், "எனது கள ஆய்வின் போது கண்டறியப்பட்ட தமிழ் கல்வெட்டோடு காணப்படும் கிணற்றினை முறையாக ஆய்வு செய்து ஆவணப்படுத்தும் விதமாக தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியினை சேர்ந்த முனைவர் த.த.தவசிமுத்து அவர்களை 10.11.2023 அன்று வரவழைத்து ஆய்வு செய்ததன் அடிப்படையில் இந்த கிணறானது எக்காலத்தும் வற்றாத நீறூற்றினை கொண்ட கமலைக்கிணறு,
இந்த கிணறானது பொ.ஊ1234ம் ஆண்டு ஆட்சி செய்த முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தினை சார்ந்தது என்பதனை இதில் காணப்படும் மங்கள சொற்களோடு ஆரம்பிக்கும் பாடல் கல்வெட்டின் வாயிலாக புலனாகிறது என்றும், இந்த தகவலானது ஆய்வாளரால் ஆவணம் இதழில் 34ஃ2023 தொகுப்பில் 57ம் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
இத்தகைய வரலாற்று சிறப்பு வாய்ந்த கிணறானது தற்போது பராமரிப்பு இல்லாமலும், பாதுகாப்பற்ற நிலையிலும் உள்ளதால் தயவாய் பாதுகாத்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஏதுவானதாக்கி நமது பாண்டிய மன்னன் முதலாம் மாறவர்மனன் சுந்தரபாண்டியனின் நல்லெண்ணம் குன்றாது காத்திட தொல்லியல் ஆர்வலர்கள் மற்றும் ஆய்வாளர்கள் சார்பாக கோரிக்கைகளை பதிவு செய்கின்றோம் என்றார். மேலும், இது தொடர்பாக மாநகர ஆணையாளருக்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வாயிலாக கோரிக்கையினை சமர்ப்பத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!