சூப்பர்... அர்ச்சனா பட்நாயக் தமிழகத்தின் முதல் பெண் தலைமைத் தேர்தல் அலுவலராக பொறுப்பேற்பு!
தமிழகத்தின் புதிய தலைமைத் தோ்தல் அதிகாரியாக அா்ச்சனா பட்நாயக் இன்று நவம்பர் 12ம் தேதி செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றார். இதன்மூலம், மாநிலத்தின் முதல் பெண் தலைமைத் தேர்தல் அதிகாரி என்ற பெருமையை பெற்றுள்ளார்.இதுவரை தமிழகத்தின் தலைமைத் தோ்தல் அதிகாரியாக இருந்த சத்யபிரத சாகு, தமிழக அரசுப் பணிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கால்நடை, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை முதன்மைச் செயலராக நியமிக்கப்பட்டிருந்த அவா், தலைமைத் தோ்தல் அதிகாரியாக கூடுதல் பொறுப்பை வகித்து வந்தார். இந்நிலையில் தற்போது குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறைச் செயலராக இருந்த அர்ச்சனா பட்நாயக் தலைமைத் தேர்தல் அலுவலராக நியமித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஒடிஸா மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட அர்ச்சனா 2002ம் ஆண்டு தமிழக பிரிவு ஐஏஎஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டாா். கோவை, உதகை மாவட்டங்களின் ஆட்சியா், தோட்டக்கலைத் துறை ஆணையா் உட்பட பல்வேறு பொறுப்புகளை வகித்த அவா் கடைசியாக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறைச் செயலராக நியமிக்கப்பட்டார். 1948ம் ஆண்டு தலைமைத் தோ்தல் அதிகாரி பொறுப்பு உருவாக்கப்பட்டது. அப்போது முதற்கொண்டு தலைமைத் தோ்தல் அதிகாரிகளாக வட மாநிலங்களைச் சோ்ந்த தமிழக பிரிவு ஆண் ஐஏஎஸ் அதிகாரிகளே பணிபுரிந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!