ரூ 50000க்கு மேல இருந்தா ஆவணத்தை வாட்ஸ்-அப்ல காட்டுங்க... அர்ச்சனா பட்நாயக் அதிரடி!
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து மாநிலம் முழுவதும் பறக்கும் படையினர் வாகன சோதனையில் வேகம் காட்டி வருகின்றனர். பொதுமக்கள் யாரும் உரிய ஆதாரமின்றி 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ரொக்கமாக எடுத்துச் செல்லக் கூடாது எனத் தேர்தல் ஆணையம் கறாராகத் தெரிவித்துள்ளது. இதுவரை நடத்தப்பட்ட சோதனையில் சுமார் 152 கோடி ரூபாய் மதிப்பிலான ரொக்கம், தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது அதிர வைத்துள்ளது.

இதில் தங்கம் மற்றும் வெள்ளியின் மதிப்பு மட்டுமே 92 கோடி ரூபாய் என்பதும், 72 லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபானங்கள் பிடிபட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. மே 6-ஆம் தேதி வரை இந்தக் கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்பதால், பொதுமக்கள் வெளியூர் செல்லும் போது தகுந்த ஆவணங்களை வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக, மருத்துவச் சிகிச்சைக்காகப் பணம் கொண்டு செல்வோர் கடும் இன்னல்களைச் சந்திப்பதாகப் புகார்கள் எழுந்தன.

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், "பொதுமக்களைத் தொல்லை செய்யக் கூடாது எனப் பறக்கும் படைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மருத்துவக் காரணங்களுக்காகப் பணம் கொண்டு செல்வோர், அதற்கான ஆதாரங்களை வாட்ஸ்-அப் மூலம் காண்பித்தாலே போதும், அவர்கள் அனுமதிக்கப்படுவர்" எனத் தெளிவுபடுத்தியுள்ளார். அதேபோல், வணிகர்களின் கோரிக்கைகளும் தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், நகர்ப்புறங்களில் வாக்குப்பதிவை அதிகரிக்கத் தீவிர முயற்சிகள் எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
