'150 காங்கிரஸ் எம்.பி.க்கள் ரஷ்யாவால் நிதியளிக்கப்படுகிறார்களா? சிஐஏ ஆவணம் சொல்லுவது என்ன?!

"காங்கிரஸ், ஊழல் மற்றும் அடிமைத்தனம். இந்த ரகசிய ஆவணம் 2011 இல் CIA ஆல் வெளியிடட்ப்பட்டது. அதன் படி, மறைந்த காங்கிரஸ் தலைவர் எச்.கே.எல். பகத்தின் தலைமையில், 150க்கும் மேற்பட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் சோவியட் ரஷ்யாவால் நிதியளிக்கப்பட்டு, ரஷ்யாவின் ஏஜென்ட்டுகளாக செயல்பட்டார்களா?" என்று நிஷிகாந்த் துபே தனது 'X' பதிவில் எழுதினார்.
कांग्रेस,करप्सन और ग़ुलामी
— Dr Nishikant Dubey (@nishikant_dubey) June 30, 2025
1. यह अवर्गीकृत गुप्त दस्तावेज CIA का 2011 में जारी हुआ
2. इसके अनुसार स्वर्गीय कांग्रेस के बड़े नेता HKL भगत के नेतृत्व में 150 से ज़्यादा कॉंग्रेस के सांसद सोवियत रुस के पैसे पर पलते थे,रुस के लिए दलाली करते थे?
3. पत्रकारों के समूह उनके दलाल थे तथा… pic.twitter.com/ozKx9nPUCe
பாஜக எம்.பி., பத்திரிகையாளர்கள் குழு ஒன்று தங்கள் "ஏஜென்ட்கள்" என்று குறிப்பிட்டார் நிஷிகாந்த் துபே. மேலும், தான் பகிர்ந்து கொண்ட ஆவணத்தில் ரஷ்யா வெளியிட்ட 16,000 செய்திக் கட்டுரைகளின் பட்டியல் இருப்பதாகக் கூறினார்.
காங்கிரஸ் ஆட்சியின் போது, ரஷ்ய உளவுத்துறை நிறுவனத்தைச் சேர்ந்த 1100 பேர் இந்தியாவில் இருந்ததாகவும், அவர்கள் அதிகாரிகள், வணிக அமைப்புகள், கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் ஆகியவர்களை தங்கள் "பைகளில்" வைத்திருந்ததாகவும் அவர் மேலும் குற்றம் சாட்டினார்.
சோவியட் யூனியன் ஆட்சியின் போது தேர்தல் என்ற பெயரில் காங்கிரஸ் வேட்பாளர் சுபத்ரா ஜோஷி ஜெர்மன் அரசிடமிருந்து ரூ.5 லட்சம் பெற்றுக் கொண்டார், தோல்வியடைந்த பிறகு, இந்தோ-ஜெர்மன் மன்றத்தின் தலைவரானார். இது குறித்து நிஷிகாந்த் துபே மேலும் குற்றம் சாட்டினார்.

"பத்திரிகையாளர்கள் குழு அவர்களின் ஏஜென்ட்களாக இருந்தனர், மேலும் ரஷ்யாவில் மொத்தம் 16,000 செய்தி கட்டுரைகள் வெளியிடப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது? அந்த நேரத்தில், ரஷ்ய உளவுத்துறை நிறுவனங்களைச் சேர்ந்த 1100 பேர் இந்தியாவில் இருந்தனர்.
அதிகாரிகள், வணிக அமைப்புகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் கருத்து உருவாக்குபவர்களைத் தங்கள் பைகளில் வைத்திருந்தனர். இந்தியாவின் கொள்கைகளையும் தகவல்களையும் வடிவமைத்தனர். அந்த நேரத்தில் தேர்தல் என்ற பெயரில் காங்கிரஸ் வேட்பாளர் சுபத்ரா ஜோஷி ஜெர்மன் அரசாங்கத்திடமிருந்து 5 லட்சம் ரூபாயை வாங்கி, தோல்வியடைந்த பிறகு, இந்தோ-ஜெர்மன் மன்றத்தின் தலைவரானார்.
இது ஒரு நாடா அல்லது அடிமைகள், முகவர்கள் மற்றும் இடைத்தரகர்களின் கைப்பாவையா? காங்கிரஸ் பதிலளிக்க வேண்டும், இன்று இது குறித்து விசாரணை நடத்த வேண்டுமா இல்லையா?" என்று நிஷிகாந்த் துபே தனது 'எக்ஸ்' பதிவில் கூறியுள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!