முட்டைகளில் கேன்சர் உருவாக்கும் வேதிப்பொருள்? நாடு முழுவதும் சோதனை நடத்த மத்திய அரசு உத்தரவு!

 
முட்டை கோழி

நாம் அன்றாடம் விரும்பி உண்ணும் முட்டைகளில், புற்றுநோயை உண்டாக்கும் அபாயகரமான வேதிப்பொருள் கலந்திருப்பதாக எழுந்துள்ள புகார் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவைச் சேர்ந்த பிரபல முட்டை விற்பனை நிறுவனமான 'எக்கோஸ்' (Eggoz) சந்தைப்படுத்தும் முட்டைகளில், 'நைட்ரோபுரான்' எனப்படும் தடைசெய்யப்பட்ட ஆன்டிபயாடிக் மருந்தின் எச்சங்கள் இருப்பதாக இணையத்தில் வெளியான அறிக்கை ஒன்று இந்த சர்ச்சையைத் தீயாகப் பரவச் செய்துள்ளது. இதனால் முட்டை பிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அச்சம் நிலவுகிறது.

நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI), நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் முட்டை மாதிரிகளைச் சேகரித்து தீவிர சோதனை நடத்த அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. பிரபல பிராண்டட் நிறுவனங்களின் முட்டைகள் மட்டுமின்றி, சாதாரணக் கடைகளில் விற்கப்படும் முட்டைகளையும் ஆய்வகங்களுக்கு அனுப்பிச் சோதனை செய்ய மண்டல அலுவலகங்களுக்குச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள 10 பிரத்யேக ஆய்வகங்களில் இந்தச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, முட்டையின் தரம் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.

முட்டை

'நைட்ரோபுரான்' என்பது கோழிப் பண்ணைகளில் பயன்படுத்தத் தடைசெய்யப்பட்ட ஒரு மருந்து. இது கோழிகளுக்கு அளிக்கப்படும்போது, அதன் எச்சங்கள் முட்டையில் தங்கிவிடுகின்றன. மிக முக்கியமாக, முட்டையை எவ்வளவுதான் வேகவைத்தாலும் அல்லது சமைத்தாலும் இந்த வேதிப்பொருள் அழியாது என்பதுதான் அச்சத்தை அதிகப்படுத்துகிறது. இது மனித உடலில் புற்றுநோய் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால் உலக நாடுகளால் இது தடைசெய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்தியாவில் உள்ள சில பண்ணைகளில் இது சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்படுகிறதா என்பது குறித்து இப்போது விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

முட்டை

இதற்கிடையே, தன் மீதான புகார்களை எக்கோஸ் நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. 2025 டிசம்பர் மாதத்தில் எடுக்கப்பட்ட சமீபத்திய ஆய்வகப் பரிசோதனை முடிவுகளின்படி, தங்கள் முட்டைகளில் எந்தவிதமான நச்சுத்தன்மையும் இல்லை என்று அந்த நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இருப்பினும், மக்களின் உயிரோடு விளையாடும் வேதிப்பொருள் கலப்பு குறித்த சர்ச்சை எழுந்திருப்பதால், மத்திய அரசின் இந்த நாடு தழுவிய சோதனையின் முடிவுகளுக்காக ஒட்டுமொத்த இந்தியாவும் காத்திருக்கிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!