முட்டைகளை ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்துவது நல்லதா?

 
ஃப்ரிட்ஜில் முட்டை

மருந்துகள், சமைக்காத உணவு பொருட்களை வீணாகாமல் நீண்ட நாட்கள் பாதுகாப்பாக இருப்பதற்காக தான் குளிர்சாதன பெட்டிகள் கண்டறியப்பட்டன. உணவு தட்டுப்பாடு ஏற்படும் நாட்களில் உணவுப் பொருட்களை வீணாக்காமல் பயன்படுத்தவே ஃப்ரிட்ஜ் என்பதை உணர வேண்டும். உணவுப்பொருட்களை உற்பத்தி செய்யும் இடங்களில் இருந்து பாதுகாப்பான வேறொரு இடத்திற்கு எடுத்துச் செல்லவும், மருந்துகளை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கும், பால் மற்றும் காய்கறிகளை பதப்படுத்தி வைப்பதற்காக மட்டுமே ஃப்ரிட்ஜ் உருவாக்கப்பட்டது.  

ஃப்ரிட்ஜில் முட்டை

முன்னோர்கள் காலத்தில் குளிர்சாதன பெட்டிகள் கிடையாது. அவர்களின் ஆரோக்கியத்தில் எந்த வித குறைபாடும் இல்லை. மேற்கத்திய நாடுகளில் அவர்கள் நாட்டின் சீதோஷ்ண நிலைக்காக  ஃப்ரிட்ஜை பயன்படுத்தினார்கள். அனைத்திலும் அவர்களை பார்த்து காப்பியடிக்கும் நாம் இதிலும் அவர்களை பார்த்து பழகி விட்டோம் என்பதை தவிர வேறில்லை.  வாரம் ஒரு முறை காய்கறி வாங்கிக் கொள்ளலாம். சமைத்த உணவை அப்படியே ஃப்ரிட்ஜில் வைத்து தேவையான போது எடுத்து சூடுபடுத்தி சாப்பிடலாம் என்பது தான் பலரது எண்ணமும். ஆனால் அவை முழுவதுமாக அப்படி கிடையாது என்பதை நாம் உணர வேண்டும். 


எப்படி சமைத்த உணவை ப்ரிட்ஜில் வைப்பது நல்லதில்லையோ, அதேப்போல் நாம் வாங்கும் முட்டையையும் ப்ரிட்ஜில் வைத்து சாப்பிடுவது ஆரோக்கியமற்றது. அறை வெப்பநிலையில் வைத்து பராமரிக்கும் முட்டைகளை விட, ப்ரிட்ஜில் வைத்து பராமரிக்கும் முட்டைகள் விரைவில் கெட்டுப்போய்விடுமாம். அதிலும் மிகவும்  குளிர்ச்சியான இடத்தில் பராமரிக்கும் போது, அவை பாலைப்போல் திரிந்துவிடுகிறதாம்.
 
நாம் வாங்கும் முட்டை பிரஷ்ஷாக இருந்து, அதில் மேல்தோல் நீங்காமல் ஒட்டிக்கொண்டிருந்தால், அந்த முட்டையை ப்ரிட்ஜில் வைக்க கூடாது.ஒருவேளை நீங்கள் வாங்கிய முட்டையில் சால்மோனெல்லா வகை பாக்டீரியா இருந்து, அதனை ப்ரிட்ஜில் வைத்து பராமரித்தால், இதர முட்டைகளும் அந்த கொடிய பாக்டீரியாவால் தாக்கப்படும். எனவே இதனைத் தவிர்க்க வேண்டுமெனில், அறைவெப்பநிலையிலேயே பராமரிக்க வேண்டும்.

முட்டை விலை திடீர் உயர்வு
 
ஒருவேளை  முட்டையைப்பயன்படுத்தி கேக் செய்ய வேண்டுமெனில் முட்டையை ப்ரிட்ஜில் வைத்து பராமரிக்க கூடாது. ஏனெனில் ப்ரிட்ஜில் வைக்கும்  முட்டையினுள் உள்ள கருவானது மிகுந்த குளிர்ச்சியுடன் இருப்பதால், அதைக்கொண்டு கேக் செய்ய நினைத்தால், அந்த கேக் கடினமாக இருக்கும்.முட்டைகளில் விரைவில் பாக்டீரியா தொற்று உண்டாகிவிடும் அபாயம் உள்ளது. குறிப்பாக வயிற்றிற்கு கேடு விளைவிக்கும் சால்மோனெல்லா வகை பாக்டீரியா முட்டைகளின் ஓடுகளில் உருவாகும்.அதேவேளை பிரிட்ஜில் வைத்தால் வெப்பநிலை குறைந்து, குளிர்ச்சி மற்றும் ஈரப்பதமாக இருப்பதால் பாக்டீரியாக்கள் வேகமாக வளர்ச்சி அடைந்து விடுகிறது.  இந்த தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் உள்ள முட்டைகளை உண்ணும் போது குடல் மற்றும் வயிறு சம்பந்தமான நோய்கள் ஏற்பட்டு விடும் அபாயம் உள்ளது.

செய்யக் கூடாதவை: 


பிசைந்து வைத்த மைதா மாவு, கோதுமை மாவு  இவைகளை அதிக நாட்கள் பிரிட்ஜில் வைக்கக் கூடாது .
கோழி, ஆட்டுக்கறி  போன்ற அசைவ உணவுப் பொருட்கள் சமைத்த உணவுகளை ஃப்ரிட்ஜில்  ஸ்டோர் செய்ய கூடாது. 
சூடாக சமைத்த உணவுகளை அப்படியே பிரிட்ஜில் வைத்து விடக் கூடாது. 
அதே போல்  ஃபிரிட்ஜில் வைத்திருக்கும் உணவினை எடுத்து சூடுபடுத்தி சாப்பிட்டு விட்டு, மறுபடியும் அதனை ஃப்ரிட்ஜில் வைப்பதால் அந்த உணவு விஷமாக மாறிவிடும். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web