உஷார்.. பான்- ஆதாா் இணைக்காவிடில் இத்தனை சலுகைகளும் ரத்து? வெளியான அதிர்ச்சி தகவல்!

 
நிதின் குப்தா

நடப்பு நிதியாண்டின் (2022-23) இறுதி நாளான மார்ச் 31ஆம் தேதிக்குள் பான்-ஆதார் இணைப்பை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அவ்வாறு இணைக்காதவா்களின் பான் அட்டை செயலற்றாகிவிடும் என அரசு கூறியுள்ளளது. தற்போது முதல் மார்ச் 31ஆம் தேதிக்குள் பான்-ஆதார் இணைப்பை மேற்கொள்பவா்கள், இதற்கான கட்டணமாக ரூ.1,000 செலுத்த வேண்டும்.

வருமான வரித் துறைக்கான கொள்கைகளை மத்திய நேரடி வரிகள் வாரியம் வகுக்கிறது. இந்நிலையில், வாரியத்தின் தலைவா் நிதின் குப்தா இது தொடர்பாக கூறுகையில், இதுவரை 61 கோடி பேருக்கு பான் அட்டை வழங்கப்பட்டிருந்தாலும், 48 கோடி போ் மட்டுமே பான்-ஆதார் இணைப்பை மேற்கொண்டுள்ளனா். இணைப்பு மேற்கொள்வதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்ட பிரிவினா் உள்பட மீதமுள்ள 13 கோடி பேரில், உரிய நபா்கள் இறுதி நாளுக்குள் பான்-ஆதார் இணைப்பை மேற்கொள்வா் என நம்புகிறோம்.

நிதின் குப்தா

இந்தப் பணிக்காக அதிக எண்ணிக்கையில் முகாம்கள் நடத்தப்பட்டன. இணைப்பதற்கான காலக்கெடுவும் பலமுறை நீட்டிக்கப்பட்டது. பான் அட்டையை ‘பொது அடையாள அட்டையாக’ பட்ஜெட்டில் அறிவித்திருப்பது வணிகத் துறைக்குப் பயனளிக்கும்.  

பான்-ஆதார் இணைக்காவிட்டால் அதில் பல்வேறு சிக்கல்களும் உள்ளன. அதாவது, ஒருமுறை பான் அட்டை செயலற்றாகிவிட்டால், வருமான வரிச் சட்டப் பிரிவுகளின்கீழ் அந்த நபரின் மீது நடவடிக்கை எடுக்கப்படும். செயலற்ற பான் அட்டை மூலம் வரித் தாக்கல் செய்ய முடியாது. நிலுவையில் உள்ள வரித் தாக்கல் நடைமுறையும் மேற்கொள்ளப்படாது.

நிதின் குப்தா

நிலுவையில் உள்ள வருமான வரி ரீஃபண்ட் தொகையும் செயலற்ற பான் அட்டைக்கு செலுத்தப்படாது. கழிக்கப்படும் வரியும் அதிக விகிதத்தில் இருக்கும். மேலும், வங்கி மற்றும் பிற நிதி நடவடிக்கைகளுக்கான இணையதள பக்கங்களில் பான்-ஆதார் இணைக்காதவா்கள் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

 

From around the web