உஷார்!! கூகுள் பே மூலம் பணத்தை திருடும் நூதன மோசடி!! கடும் எச்சரிக்கை!!

 
பணம்

நவீனமயமாகிவிட்ட இன்றைய காலக்கட்டத்தில் அதே பாணியில் மோசடி, கொள்ளை சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. இதுநாள் வரை செல்போண் எண்ணுக்க வரும் குறுஞ்செய்தியில் இருக்கும் லிங்கை கிளிக் செய்யவேண்டாம் என காவல்துறை விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தது. தற்போது கூடுதலாக கூகுள் பே மூலம் கொள்ளை கும்பல் மோசடியை அரங்கேற்றி வருகிறது.

பிரபல பண பரிமாற்ற செயலியான கூகுள் பேயில் புதிய வகை மோசடி நடந்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். டீக்கடைகள், உணவகங்கள், வணிக வளாகங்கள், துணிக்கடைகள் மற்றும் இணைய வணிகப் பரிவர்த்தனைகள் உள்பட கூகுள் பே பயன்பாடு வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்டது.

பணம்

கூகுள் பே மூலம் தினமும் லட்சக்கணக்கானோர் பணப்பரிவர்த்தனை செய்து வரும் நிலையில், சிலர் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக திடுக்கிடும் தகவலை காவல் துறையினர்  வெளியிட்டுள்ளனர்.

யாரோ ஒருவர் தெரிந்தே உங்கள் கணக்கு அல்லது கூகுள் பே-க்கு பணத்தை அனுப்புகிறார். உங்களை அழைத்து தவறுதலாக பணம் அனுப்பப்பட்டது எனக் கூறி, திரும்ப அனுப்ப செல்கிறார். நீங்கள் அவருக்கு பணத்தை அனுப்பும் போது உங்கள் கணக்கு ஹேக் செய்யப்படுகிறது.

பணம்
 
இதுபோல், யாராது உங்கள் கணக்கில் தவறாகப் பணம் அனுப்பிருந்தால், அழைப்பாளரிடம் அடையாளச் சான்றுடன் அருகிலுள்ள காவல் நிலையத்துக்கு வந்து பணமாக பெற்றுச் செல்லுமாறு கூறுங்கள் என காவல் துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீண்டும் மீண்டும் காவல்துறை கூறுவது ஏனெனில் மக்கள் பணத்தை இல்லாமல் விழிப்புணர்வுடன் இருக்கத்தான்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

 

From around the web