"திருப்பரங்குன்றம் தீபத்தால் ஆட்சிக்கு பயமா?" - திமுகவை விளாசும் நடிகை கஸ்தூரி - ஒட்டக பூஜை குறித்து பரபரப்பு கேள்வி!

 
கஸ்தூரி திருப்பரங்குன்றம்

சிறை வாசத்திற்குப் பிறகு மீண்டும் தனது அதிரடிப் பேச்சுகளால் அரசியல் களத்தைச் சூடாக்கியுள்ளார் நடிகை கஸ்தூரி. மதுரையில் உள்ள அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அங்குள்ள மலை மீது தீபம் ஏற்றுவது தொடர்பான சர்ச்சையில் தமிழக அரசு மௌனம் காப்பதாகக் கடும் விமர்சனங்களை முன்வைத்தார். குறிப்பாக, "திமுக ஆட்சியில் அரசியல் ரீதியாகக் கைது செய்யப்பட்ட முதல் பெண் நான் தான்" என்று கூறிய அவர், அரசாங்கத்தின் செயல்பாடுகளை அடுக்கடுக்கான கேள்விகளால் துளைத்தெடுத்தார்.

கஸ்தூரி திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரத்தில் அரசு தெளிவான முடிவை அறிவிக்காமல் காலம் தாழ்த்தி வருவதாகக் கஸ்தூரி சாடினார். "இந்த விவகாரத்தில் ஆமாம் அல்லது இல்லை என ஏதாவது ஒரு பதிலைச் சொல்லுங்கள். எதற்கும் பதில் சொல்லாமல் பேசா மடந்தையாக இருப்பதற்குக் காரணம், உங்களுக்குப் பேச விருப்பமில்லையா அல்லது பேசத் தெரியவில்லையா? முதலமைச்சருக்கு எழுதித் தருபவர்கள் எல்லாம் விடுமுறையில் இருக்கிறார்களா?" என்று கிண்டலாகக் கேள்வி எழுப்பினார். தீபம் ஏற்றுவதைத் தடுப்பதற்குப் பின்னால் அரசியல் காரணங்கள் இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், "தீபம் ஏற்றினால் சோறு கிடைக்குமா?" என்று கேட்டிருந்த விமர்சனத்திற்குப் பதிலடி கொடுத்த கஸ்தூரி, "சந்தனக்கூடு திருவிழா நடத்தினால் மட்டும் சோறு கிடைக்குமா என அவர் கேட்பாரா? அவர் தனது கட்சியை மட்டும் கலைக்கத் தயாராக இருந்தால், நான் பத்தாயிரம் பேருக்குச் சோறு போடுகிறேன்" என்று ஆவேசமாகச் சவால் விடுத்தார். மத ரீதியான வழிபாடுகளைத் திருமாவளவன் இழிவுபடுத்துவதாகக் கூறிய அவர், இது போன்ற பேச்சுகள் இந்து மக்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதாகவும் தெரிவித்தார்.

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றினால் ஆட்சிக்கு ஆபத்து வரும் என்று யாராவது பயப்படுகிறார்களா? என்ற கேள்வியை எழுப்பிய கஸ்தூரி, சமீபத்தில் நடந்ததாகக் கூறப்படும் ஒரு பூஜை குறித்தும் பேசினார். "மலை மீது தீபம் ஏற்றினால் ஆட்சிக்குக் கண்டம் ஏற்படும் என்ற பயத்தால்தான், அதனை மறைக்க ஒட்டக பூஜையெல்லாம் நடத்தப்பட்டதா என்று தெரியவில்லை" எனத் தனது பாணியில் அதிரடியாகக் கருத்துத் தெரிவித்தார். நடிகை கஸ்தூரியின் இந்தப் பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!