பெற்ற தாயை கத்தியால் குத்திய மகன்!! பகீர் பிண்ணனி!!

 
அமுலு

சென்னையின் புறநகர் பகுதியான சிட்லபாக்கம் பகுதியில் அமுலு (59) என்ற பெண் வசித்து வருகிறார். இவரது கணவர் அருள்தாஸ் (62) பிரிந்து சென்றுவிட்டார். இதனால் அமுலு தனது 2 மகன்களுடன் வசித்து வருகிறார். மேலும், மீன் வியாபாரம் செய்து குடும்பத்தை நடத்தி வருகிறார். அமுலுவின் மூத்த மகன் மணிகண்டன் (38) ஆட்டோ ஓட்டி வருகிறார். இவருக்கு திருமணமான நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அவரது மனைவி பிரிந்து சென்றுள்ளார். இதனால், மணிகண்டன் சிறிது மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அமுலு

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்த தனது தாய் அமுலுவிடம் மணிகண்டன் செலவுக்கு பணம் கேட்டுள்ளார். அப்போது, அமுலு, பணம் கொடுக்க மறுத்துள்ளார். இது தொடர்பாக தாய்க்கும் மகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

அமுலு

அப்போது ஆத்திரம்  அடைந்த மணிகண்டன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து அவரை வெட்டியுள்ளார். இதில் வெட்டுகாயம் அடைந்த அவர் அலறியதால், அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டனர். இதனால் மணிகண்டன் தப்பியோடினார். பின்னர் அக்கம்பக்கத்தினர் அமுலுவை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சிட்லபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மணிகண்டனை கைது செய்தனர்.  

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!