சென்னைக்கு வர்றீங்களா உஷார்... இன்று முதல் கிளாம்பாக்கம் வரை மட்டுமே பேருந்துகள் இயக்கம்.... தாம்பரம் வரை கூட செல்லாது!

தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வர்றவங்க இதையெல்லாம் தெரிஞ்சுகோங்க. அப்புறமா காலையில் கிளாம்பாக்கத்தில் இருந்து தனியா இன்னொரு ரயிலையோ, பேருந்தையோ, வசதியிருந்தா ஆட்டோ, காரையோ பிடிச்சு சென்னைக்குள் வர வேண்டும். இன்று முதல் கிளாம்பாக்கத்தோடு தென்மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகள் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை தாம்பரத்தில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதனைகட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தாம்பரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தடுப்பதற்கு புதிய அறிவிப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியான அறிக்கையில் தாம்பரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு, போக்குவரத்து காவல்துறை வழங்கி உள்ள பரிந்துரையின்படி, தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இருந்து செங்கல்பட்டு, திண்டிவனம் வழியாக தாம்பரம் வரை இயக்கப்பட்டு வந்த தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் அனைத்தும் இன்று முதல் சென்னை கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் வரை இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை மாநகர போக்குவரத்து கழகத்தில் மொத்தம் 589 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. எனவே கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து சென்னையின் பல்வேறு இடங்களுக்கு செல்லும் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு தற்போது கூடுதலாக 14 பேருந்துகள் 816 பயண நடைகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!