லீவுக்கு ஊருக்குப் போறீங்களா...? இந்த எக்ஸ்பிரஸ் ரயில்கள் எல்லாம் பகுதியாக ரத்து! நோட் பண்ணிக்கோங்க!

 
ரயில் கூட்டம் வெளியூர் செண்ட்ரல்

யானை, மழை, கடல் போன்றவைகளை எல்லாம் எத்தனை நேரம் பார்த்துக் கொண்டிருந்தாலும்  மனதிற்கு அலுப்பு ஏற்படுவதில்லை. அது போல் தான் எத்தனை சொகுசு பயணமாக இருந்தாலும் விமானத்தை விட ரயில் பயணங்கள் அலுப்பதில்லை. பாதுகாப்பான பயணமாகவும் இன்று வரையில் ரயில் பயணங்களே மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. விடுமுறைக்கு ரயில் பயணத்தை திட்டமிடுபவர்கள் இதைத் தெரிஞ்சுக்கோங்க.. திருவனந்தபுரம் கோட்டத்தில் பொறியியல் பணிகளை எளிதாக்கும் வகையில்,  இந்த ரயில் சேவைகளில் பின்வரும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.  நேற்று முதல் மார்ச் 22ம் தேதி வரையில் கீழ்காணும் ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளன. உங்கள் பயண திட்டங்களை அதற்கேற்ப திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.

ரயில்
 ரெயில் எண். 22627 திருச்சிராப்பள்ளி ஜங்ஷன்  - திருச்சிராப்பள்ளியில் இருந்து புறப்படும் திருவனந்தபுரம் சென்ட்ரல் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ். இன்று மார்ச் 17, 18, 19, 20 21, 22 மார்ச், 2023 ஆகிய தேதிகளில் காலை 07.20 மணிக்கு திருநெல்வேலி ஜங்ஷன் வரை மட்டுமே இயக்கப்படும் திருவனந்தபுரம் சென்ட்ரல்.  திருநெல்வேலியில் இருந்து ரயில் இயக்கப்படாது.  

ரயில்  நடைமேடை  கட்டணம்  உயர்வு

 அதே போன்று ரயில் எண். 22628 திருவனந்தபுரம் சென்ட்ரல் - திருச்சிராப்பள்ளி ஜங்ஷன் 2023 மார்ச் 17, 18, 19, 20, 21, 22 ஆகிய தேதிகளில் திருவனந்தபுரம் சென்ட்ரலில் இருந்து காலை 11.35 மணிக்கு புறப்படும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் சென்ட்ரல் - திருநெல்வேலி இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.  இந்த ரயில் திருநெல்வேலியில் இருந்து சேவையைத் தொடங்கும்.  மதியம் 02.25 மணிக்கு அதன் திட்டமிடப்பட்ட நேரத்தில் புறப்படும் .

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web