துணைத்தேர்வர்களே தயாரா? இன்று முதல் பயிற்சி வகுப்புக்கள் தொடக்கம்!!

 
அரசுப்பள்ளி மாணவர்கள்

தமிழகத்தில் மே 8ம் தேதி  பிளஸ் 2  தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் மொத்தம் 8.03 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதினர். இதில் 7.56 லட்சம் மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலையில் தோல்வி அடைந்தவர்களுக்கு ஜூன் 19ம் தேதி முதல் துணைத்தேர்வுகள் நடைபெறும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.  இது குறித்து பள்ளிகளுக்கு சுற்றறிக்கை  ஒன்றை பள்ளிக் கல்வித்துறை அனுப்பியுள்ளது. அதில் தேர்வில்  தோல்வி அடைந்த மாணவர்கள் மற்றும் தேர்வுக்கு வராத மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு அந்தந்த பள்ளிகளில் மே 15ம் தேதி இன்று முதல் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்த வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

பொதுத் தேர்வு


இதே போல் பிளஸ் 2 துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க, தனித்தேர்வர்கள் அந்தந்த அரசு மேல்நிலைப்பள்ளியில் விண்ணப்பிக்கலாம்.  மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 தேர்வை எழுதாத மற்றும் தேர்ச்சி பெறாத மாணவர்கள், ஜூன், ஜூலை மாதம் நடக்கும் சிறப்பு துணைத் தேர்வுகளுக்கு, அந்தந்த பள்ளிகள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.இது தவிர தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள், முதல் முறையாக துணைத்தேர்வு எழுதுபவர்கள்,  தனித்தேர்வர்கள் அனைவரும், அந்தந்த கல்வி மாவட்டம் வாரியாக அமைக்கப்பட்ட சேவை மையங்கள் மூலம் , தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

தேர்வு முடிவுகள்

மே 17ம்தேதி நாளை மறுநாள் வரை துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பங்களை  தேர்வர்கள் நேரடியாகச்சென்று, பதிவு செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.தவறியவர்கள் மே 18 முதல் மே 20ம் தேதி வரை தட்கல் முறையில் விண்ணப்பிக்கலாம். பிளஸ் 1 தேர்வில் தேர்ச்சி பெறாத தனித்தேர்வர்கள், துணைத்தேர்வு எழுதவும் சேர்த்து விண்ணப்பிக்கலாம். துணைத்தேர்வுக்கான கால அட்டவணை www.dge.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ  இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளன. கூடுதல் தகவல்களுக்கு, சேவை மையங்களை அணுகலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web