தேர்வுக்கு தயாரா?! 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான ஹால் டிக்கெட்!! பதிவிறக்கம் செய்யும் முறை!!

 
தேர்வு தாள்கள் திருத்தும் பணி

தமிழகத்தில் 12 மற்றும் 11ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு தேதிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டன. அதன்படி 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 14 முதல் தொடங்க இருக்கிறது. 11 ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகளும் மார்ச் 14 ம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இந்த மாணவர்களுக்கான ஹால் டிக்கெட்டுகளை நாளை மறுநாள் மார்ச் 3ம் தேதி முதல் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தேர்வு

இது குறித்து அரசு தேர்வுகள் இயக்ககம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஹால் டிக்கெட்டை மார்ச் 3ம் தேதி முதல் www.dge1.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் . இதனை அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள்  அதிகாரப்பூர்வ இணையதளமான www.dge1.tn.gov.in ல் “online-portal” லை  “Click” செய்ய வேண்டும்.

அரசு தேர்வுகள் இயக்ககம்
இதில்  “HIGHER SECONDARY FIRST YEAR / SECOND YEAR EXAM MARCH/APRIL 2023″ என்ற  பக்கத்தில் அவரவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள User ID, Password ஐ பயன்படுத்தி தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுக்களை அதாவது ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது குறித்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் அறிவுறுத்த வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தகுந்த ஒத்துழைப்பு அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web