மாணவர்களே தயாரா?! நாளை முதல் மதிப்பெண் பட்டியல் விநியோகம்!!

 
மதிப்பெண்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் மார்ச் 13ம் தேதி தொடங்கி ஏப்ரல் 3ம் தேதி வரை நடைபெற்றது. தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில் விடைத்தாள்கள் திருத்தும் பணி நடைபெற்றது.  12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை தமிழகம்  மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 8.76 லட்சம் பேர் எழுதினர்.  ஏப்ரல்  10ம் தேதி முதல் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கி  ஏப்ரல் 21ம் தேதி நிறைவடைந்தது.  மே 5ம் தேதி முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில்   நீட் தேர்வு  மே 7ம் தேதி தொடங்க இருந்ததால்  தேர்வு முடிவுகள் மே 8ம் தேதிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. 

மதிப்பெண்

திட்டமிட்டபடி தமிழகத்தில் மே 8ம் தேதி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சாரால் வெளியிடப்பட்டது. இதில் தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.03% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில்  மாணவர்கள் 91.45% , மாணவிகள் 96.38% தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். மாணவர்களை விட மாணவிகளே  4.93% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோல் தமிழகத்தில் அதிகளவில் தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில் விருதுநகர் முதலிடம் பெற்றுள்ளது.

திருப்பூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. குறைவான தேர்ச்சி சதவீதம் பெற்ற மாவட்டமாக ராணிப்பேட்டை மாவட்டம் அறியப்படுகிறது.  326 அரசு மேல்நிலைப்பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளன.இந்நிலையில், 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி அடைந்த மாணவர்கள் நாளை முதல் அந்தந்த பள்ளிகளில் மதிப்பெண் பட்டியலை பெற்றுக் ள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளி தேர்வுத்துறை இயக்குனர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியலை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் www.dge.tn.gov.in என்ற இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அரசு தேர்வுகள் இயக்ககம்

அதன்பின் மதிப்பெண் பட்டியலில் உள்ள தகவல்களை சரிபார்த்து, கையொப்பம், பள்ளி முத்திரையிட்டு தயாராக வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை நாளை மே 12ம் தேதி வெள்ளிக்கிழமை விநியோகிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதிப்பெண் பட்டியலில் பிழைகள் ஏதும் இருப்பின் அதன் விவரங்களை இயக்குனரகத்துக்கு தெரிவிக்க வேண்டும். இந்த மதிப்பெண் பட்டியலை கல்லூரி சேர்க்கை உட்பட அவசர தேவைகளுக்கு மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் அச்சிடப்பட்டு பின்பு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web