டீ கேட்டதால் தகராறு.. மாமியாரை இரும்பு கம்பியால் அடித்துக் கொன்ற மருமகள்!

 
கனகு

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள மலைக்குடிபட்டி கிராமத்தில் சுப்பிரமணி- கனகு (42) தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுடன்  சுப்பிரமணியின் தாயார் பழனியம்மாள் (75) ஒரே வீட்டில் வசித்து வந்தார்.  

விவசாய கூலி வேலைக்கு செல்லும் சுப்பிரமணி இரவில் வீட்டுக்கு வந்துள்ளார். சாப்பிட்ட பிறகு அனைவரும் தூங்கினர். அப்போது, தலைவலி காரணமாக பழனியம்மாள் தனது மருமகள் கனகுவிடம் டீ கேட்டுள்ளார். அப்போது கனகு தூக்கத்தில் இருந்து எழுந்து தனது மாமியாரான பழனியம்மாளுக்கு டீ போட்டு கொண்டு வந்து கொடுத்தார். அப்போது டீ மிகவும் ஆறிப்போய் இருந்ததாக கோபமடைந்து பழனியம்மாள் மருமகளை திட்டியுள்ளார்.

கனகு

நள்ளிரவில் டீ போட்டு கொடுத்தும் திட்டுகிறீர்களே என்று கேட்டதால் மாமியார் - மருமகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் தகராறு முற்றியதால் ஆத்திரம் அடைந்த கனகு அருகில் கிடந்த இரும்பு கம்பியை எடுத்து மாமியார் என்றும் பாராமல் சரமரியாக தாக்கினார். இதில் தலை மற்றும் முகத்தில் பலத்த காயம் அடைந்த பழனியம்மாள் வலியால் கூச்சல் போட்டார்.

கனகு

இதைக் கேட்டு தூங்கி எழுந்த சுப்பிரமணி மற்றும் அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்து காயத்துடன் தவித்த பழனியம்மாளை மீட்டு விராலிமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த இலுப்பூர் போலீசார் பழனியம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து கனகுவை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

 

 

From around the web