‘என்ஜாய் எஞ்சாமி’ பாடல் சர்ச்சை… அறிவு – சந்தோஷ் நாராயணன் வார்த்தை மோதல்!

 
santhosh santhosh

‘என்ஜாய் எஞ்சாமி’ பாடலைச் சுற்றிய ராயல்டி சர்ச்சை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. 2021ஆம் ஆண்டு வெளியான இந்தப் பாடல், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவானது. பாடலின் வரிகளை எழுதி பாடியவர் தெருக்குரல் அறிவு. பாடல் வெளியான காலத்திலிருந்தே காப்புரிமை, ராயல்டி மற்றும் பணப் பகிர்வு தொடர்பான பிரச்சினை நீடித்து வருகிறது.

இதுகுறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட அறிவு, பாடலை உருவாக்கிய மற்ற கலைஞர்களிடம் உரிமைகள் இருந்தாலும் தமக்கு இதுவரை எந்த ஊதியமோ உரிமையோ வழங்கப்படவில்லை என்று குற்றம்சாட்டினார். இது அனுதாபத்திற்காக அல்ல, உழைப்பின் கண்ணியத்திற்காக தான் பேசுகிறேன் என்றும் கூறினார். மேலும் வளர்ந்து வரும் கலைஞர்கள் ஒப்பந்தங்களை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்த சந்தோஷ் நாராயணன், பாடலின் கருப்பொருள் இயக்குநர் மணிகண்டனுடையது என்றும் மெட்டுகளை உருவாக்கியதும் தயாரித்ததும் தானே என்றும் தெரிவித்தார். அறிவு வரிகளை மட்டும் எழுதி பாடியதாகவும் அவர் கூறினார். மேலும் தொழில்நுட்ப மற்றும் சட்ட ரீதியான வாதங்கள் தவறானவை என்றும், ஆதாரங்களுடன் விவாதிக்கத் தயாராக உள்ளதாகவும் சவால் விடுத்துள்ளார். இந்த வார்த்தை மோதல் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!