அர்ஜுன் எரிகைசி ஆனந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம்... குவியும் வாழ்த்துகள்!
இஸ்ரேலின் ஜெருசலேம் நகரில் நடைபெற்ற ஜெருசலேம் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி இறுதிப்போட்டியில், இந்திய செஸ் உலகின் இரண்டு பெரும் நட்சத்திரங்கள் – ஐந்து முறை உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் கிராண்ட் மாஸ்டரான அர்ஜுன் எரிகைசி – நேருக்கு நேர் மோதினர். மிகுந்த எதிர்பார்ப்பில் நடைபெற்ற ரேப்பிடு பிரிவின் முதல் இரண்டு ஆட்டங்களும் 58, 30 நகர்த்தல்களில் டிராவாகி, போட்டி தகுதியான டைபிரேக்கருக்கு சென்றது.
The final moments of India no.1 @ArjunErigaisi taking down 5-time World Champion Vishy Anand to win the Jerusalem Masters 2025!#chess #chessbaseindia #arjunerigaisi pic.twitter.com/j1t3oUFfJm
— ChessBase India (@ChessbaseIndia) December 3, 2025
டைபிரேக்கராக நடைபெற்ற பிளிட்ஸ் ஆட்டத்தில், முதல் ஆட்டத்திலேயே அர்ஜுன் 45-வது நகர்த்தலில் பாராட்டத்தக்க முறையில் வெற்றி பெற்று முன்னிலை பெற்றார். தொடர்ந்து நடந்த இரண்டாவது ஆட்டத்திலும் வெற்றி பெறும் நிலையை உருவாக்கிய அவர், 36-வது நகர்த்தலில் டிரா ஒப்புக் கொண்டார். இருந்தாலும் மொத்த கணக்கில் 2.5-1.5 என்ற முன்னிலையில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

சாம்பியனாக உயர்ந்த அர்ஜுன் எரிகைசிக்கு ரூ.49.42 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. இந்திய செஸ் உலகில் புதிய அத்தியாயத்தை எழுதும் இந்த வெற்றி, ரசிகர்கள் மத்தியில் பெரும் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
