பயங்கர ஆயுதங்களுடன் ரகளை... 4பேர் கைது!

தூத்துக்குடி மாவட்டத்தில் பயங்கர ஆயுதங்களுடன் ரகளையில் ஈடுபட்ட 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4 அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி தாளமுத்து நகர் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் சங்கரலிங்கம் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது டேவிஸ் புரம் ரோட்டில் கையில் ஆயுதங்களுடன் 4பேர் கொண்ட கும்பல் ரகளையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இதைப் பார்த்த போலீசார் 4 பேரையும் சுற்றிவளைத்து பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் தாளமுத்து நகர் சுனாமி காலனி ராமதாஸ் நகரை சேர்ந்த ராஜா மகன் ஜெகன் (20), மகேந்திரன் மகன் சஞ்சய் (20), வண்ணாரப் பேட்டை முருகன் மகன் மாரி செல்வம் (19), மாப்பிள்ளையூரணி திருவள்ளுவர் நகர் செட்டி பெருமாள் மகன் சரவணகுமார் (21) என்பது தெரியவந்தது. இது குறித்து சப் இன்ஸ்பெக்டர் சங்கரலிங்கம் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி வழக்கு பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தார். அவர்களிடம் இருந்து 4 அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!