ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு… 12 பேருக்கு சரணடைய கால அவகாசம்!
பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய தீர்ப்பு வெளியாகியுள்ளது. இந்த வழக்கில் ஜாமினில் வெளியே வந்திருந்த 12 பேரின் ஜாமின் பின்னர் ரத்து செய்யப்பட்ட நிலையில், அவர்கள் சரணடைய அவகாசம் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு வழங்கியுள்ளது.

ஜாமின் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதாக கூறி, சரணடைய கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் என அஸ்வத்தாமன் உள்ளிட்ட 12 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இதனை பரிசீலித்த நீதிமன்றம், அவர்கள் சரணடைய வரும் 13ஆம் தேதி வரை அவகாசம் வழங்கி உத்தரவிட்டது.

பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. தற்போது அந்த வழக்கு தொடர்பான விசாரணை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
