ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு... ரவுடி பொன்னை பாலுவுக்கு இடைக்கால ஜாமீன்!

 
ஆம்ஸ்ட்ராங் ஆம்ஸ்ட்ராங்
 

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரவுடி பொன்னை பாலுவுக்கு 5 நாட்கள் இடைக்கால ஜாமின் வழங்கி சென்னை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தாயின் மறைவையடுத்து இறுதிச் சடங்கில் பங்கேற்க அவர் ஜாமின் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார்.

பொன்னை பாலுவின் தாய் சமீபத்தில் உயிரிழந்த நிலையில், குடும்பச் சடங்குகளில் பங்கேற்க அனுமதி வழங்க வேண்டும் என அவரது தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை பரிசீலித்த நீதிமன்றம் மனிதாபிமான அடிப்படையில் இடைக்கால ஜாமின் வழங்கியது.

5 நாட்கள் முடிந்ததும் அவர் மீண்டும் புழல் சிறையில் சரணடைய வேண்டும் என்றும் நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது. இந்த உத்தரவு அவரது குடும்பத்தினரிடையே ஓரளவு ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!