ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகள் சிறைக்குள் பயங்கர மோதம்... ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட பின்னணி?!
பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடிகளுக்கு இடையே, புழல் சிறையின் உயர் பாதுகாப்புப் பிரிவிலேயே மோதல் வெடித்தது. இதில் சிறை அதிகாரி ஒருவரும் காயமடைந்துள்ளார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 28 பேரில், சிலர் ஜாமீனில் வெளிவந்துவிட்ட நிலையில், முக்கியக் குற்றவாளிகள் இன்னும் சிறையிலேயே உள்ளனர்.
ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு மற்றும் அவரது மைத்துனர் மணிவண்ணன் மற்றும் வெடிகுண்டு சப்ளையர் என அறியப்படும் அசோக் நகர் புதூர் அப்பு ஆகியோருக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இந்த மோதலுக்கு இரண்டு முக்கியக் காரணங்கள் தெரிய வந்துள்ளன.

ஆம்ஸ்ட்ராங் கொலைக்காக வெடிகுண்டுகள் சப்ளை செய்த அப்புவுக்கு, பேசியபடி பணம் கொடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. அசுவத்தாமன் உட்பட 12 பேர் ஜாமீனில் வெளியே வந்துவிட்ட நிலையில், தங்களை ஜாமீனில் எடுக்க ஆற்காடு சுரேஷ் தரப்பு (பொன்னை பாலு) உதவவில்லை என அப்பு தரப்பினர் ஆத்திரத்தில் இருந்துள்ளனர்.
சிறைக்குள் இரு தரப்பினரும் கைகளால் சரமாரியாகத் தாக்கிக் கொண்ட போது, அவர்களைச் சமாதானப்படுத்த முயன்ற உதவி சிறை அலுவலர் திருநாவுக்கரசு கீழே தள்ளிவிடப்பட்டார். இதில் அவரது கையில் பலத்த காயம் ஏற்பட்டு, சிறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

சிறைக் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் இந்தச் சம்பவம் குறித்து நேரடி விசாரணை நடத்தி வருகிறார். பாதுகாப்புக் காரணங்களுக்காக மோதலில் ஈடுபட்ட ரவுடிகளைத் தனித்தனிப் பிரிவுகளுக்கு மாற்றவும், அவர்கள் மீது கூடுதல் வழக்குப் பதிவு செய்யவும் சிறை நிர்வாகம் ஆலோசித்து வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
