ராணுவ தளபதிகள், அணுசக்தி விஞ்ஞானிகள் மரணம்.... இஸ்ரேல் தாக்குதலில் கொடூரம் !
ஈரான் மீது, இஸ்ரேல் ராணுவம் இன்று அதிகாலை முதல் தாக்குதல்களை நடத்தி வருகிறது. ஈரான் அணுகுண்டு தயாரிப்பதைத் தடுக்க தனது விமானப்படை தெஹ்ரானில் குண்டுவீசியதாக இஸ்ரேல் விளக்கம் அளித்துள்ளது.
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள ராணுவ தளவாடங்கள் உற்பத்தி நிலையங்கள், அணுசக்தி நிலையங்கள், ராணுவ அலுவலகங்கள் மீது ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ என்ற பெயரில் இஸ்ரேல் கடும் தாக்குதல் நடத்திருக்கிறது. இதனால் ஈரானில் பல இடங்கள் தீப்பிடித்து எரிகின்றன. இந்த தாக்குதலால் மத்திய கிழக்கில் பதற்றம் நிலவி வருகிறது.

இந்நிலையில், ஈரான் எப்போது வேண்டுமானாலும் பதில் தாக்குதல் நடத்தலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம் அமல்படுத்தப்படுள்ளது. குறிப்பாக, இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதிகள், அணுசக்தி விஞ்ஞானிகள் உயிரிழந்ததாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தற்போதைய தகவலின்படி, ஈரானிய ராணுவ படைகளின் தலைமை தளபதி முகமது பகேரி மற்றும் ஈரானிய புரட்சிகர காவல்படை தலைவர் ஹொசைன் சலாமி உயிரிழந்தனர். ஈரானிய படைகளை ஒருங்கிணைத்த தளபதி கோலமாலி ரஷித், 2 உயர்மட்ட ஈரானிய அணு விஞ்ஞானிகளும் பலியாகினர். ஈரான் அணு விஞ்ஞானிகள் அப்பாஸி-தவானி, முகமது மெக்தி தெக்ரான்சி உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
