3 வது நாளாக ராணுவம் பயங்கரவாதிகளுக்கு எதிரான தீவிர தேடுதல் வேட்டை!

 
ராணுவம்

ஜம்மு – காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிரான பாதுகாப்புப் படையினரின் தேடுதல் நடவடிக்கைகள் மூன்றாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கடந்த ஜனவரி 18ஆம் தேதி சோனார் கிராமத்தில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஒரு பாதுகாப்புப் படை வீரர் உயிரிழந்தார். மேலும் 7 வீரர்கள் படுகாயமடைந்தனர்.

இந்த தாக்குதலுக்குப் பிறகு ஜெய்ஷ்-இ-முஹமது அமைப்பைச் சேர்ந்த 2 முதல் 3 பயங்கரவாதிகள் அடர்ந்த வனப்பகுதிக்குள் தப்பிச் சென்றதாக தகவல் வெளியானது. இதையடுத்து “ஆபரேஷன் டிராஷி-I” என்ற பெயரில் ராணுவம், காவல் துறை மற்றும் சிஆர்பிஎப் இணைந்து தேடுதல் வேட்டையை தொடங்கின.

ராணுவம்

ட்ரோன்கள் மற்றும் மோப்ப நாய்களின் உதவியுடன் தேடுதல் பணிகள் நடைபெற்று வருகின்றன. 12,000 அடி உயர மலைப்பகுதியில் இருந்த பயங்கரவாதிகளின் பதுங்கு குழி ஒன்று தகர்க்கப்பட்டது. அங்கிருந்து உணவுப் பொருட்கள், போர்வைகள் மற்றும் குளிர்கால உடைகள் பறிமுதல் செய்யப்பட்டன. சந்தேகத்தின் அடிப்படையில் பலர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!