ரூ2000 கோடியில் புதிய நவீன ஆயுதங்கள் வாங்க ராணுவம் ஒப்பந்தம்!

 
ராணுவம்

 பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடங்கப்பட்டது.   மே 7ம் தேதி  பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மீது இந்திய ராணுவம் துல்லியமான தாக்குதல்களை நடத்தியது. இந்த நடவடிக்கைக்கு பிறகு ஆயுதம் கொள்முதலில் பாதுகாப்பு துறை கவனம் செலுத்தி வருகிறது.

இந்திய ராணுவம் முப்படை காஷ்மீர்

வானில் நீண்ட தூரம் சென்று தாக்கும் ட்ரோன்கள் உட்பட  புதிய நவீன ஆயுதங்கள் வாங்க முடிவு செய்யப்பட்டது.  இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை அதிகரிக்க, அவசரகால கொள்முதல் திட்டத்தின் கீழ், ரூ.1,981 கோடியில் ஆயுதம் கொள்முதல் செய்ய, 13 ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக ரூ.2,000 கோடியில் ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன.

தென் கொரிய ராணுவம்

இதற்கு மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  அதன்படி எதிரி ட்ரோன்களை துல்லியமாக அழிக்கும் ஆயுதங்கள். குறைந்த அளவிலான இலகுரக ரேடார்கள். மிக குறுகிய இடத்தில் துல்லியமாக தாக்கும் ஏவுகணைகள். குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகள். இரவிலும் பார்வையிடும் திறன் கொண்ட கருவிகள், பாலஸ்டிக் ஹெல்மெட், வெடிமருந்துகள் மற்றும் பல்வேறு வகையான ட்ரோன்கள், புல்லட் ப்ரூப் உடைகள் வாங்கப்பட உள்ளன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது