200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த ராணுவ வாகனம்… 10 வீரர்கள் வீரமரணம்!

 
ராணுவ வாகனம்

ஜம்மு–காஷ்மீரின் தோடா பகுதியில் பயங்கர விபத்து ஏற்பட்டது. 17 வீரர்களுடன் சென்ற ராணுவ வாகனம் திடீரென 200 அடி ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் 10 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

பதேர்வாஹ் – சம்பா சாலையில் ராணுவ வாகனம் சென்று கொண்டிருந்தபோது விபத்து நடந்தது. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்து நடந்த இடம் மலைப்பாதை என்பதால் மீட்புப் பணிகள் கடினமாக உள்ளன.

பள்ளத்தில் விழுந்த ராணுவ வாகனம் முற்றிலும் நசுங்கிய நிலையில் காணப்படுகிறது. தகவல் அறிந்ததும் ராணுவம் மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தொடர்ந்து மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!