டெல்லி துணை முதல்வர் மனீஷ் சிசோடியா கைது.. 8 மணி நேர விசாரணைக்கு பின் சிபிஐ நடவடிக்கை !

 
மனீஷ் சிசோடியா

2021-22-ஆம் ஆண்டு டெல்லி கலால் கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி அரசின் கலால் துறை இலாகாவுக்கு பொறுப்பு வகித்த துணை முதலமைச்சர் மனீஷ் சிசோடியா முதல் நபராக சேர்க்கப்பட்டிருந்தார். மேலும், கலால் ஆணையர் ஆரவ கோபி கிருஷ்ணா, கலால் துணை ஆணையர் ஆனந்த் குமார் திவாரி, உதவி கலால் ஆணையர் பங்கஜ் பட்நாகர், ஆம் ஆத்மி கட்சிக்கு நெருக்கமானவரும் ஓஎம்எல் கேளிக்கை நிகழ்வு மேலாண்மை நிறுவன அதிகாரியுமான விஜய் நாயர்  மற்றும் தொழிலதிபர்கள், 2 நிறுவனங்கள் மீதும் கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி சிபிஐ முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்திருந்தது.

கடந்த ஆண்டு அக். 17ஆம் தேதியும் சிபிஐ விசாரணைக்கு சிசோடியா ஆஜரானார். இந்த வழக்கில் கடந்த ஆண்டு நவம்பர் 25ஆம் தேதி சிபிஐ குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தது. ஆனால், அதில் சிசோடியா பெயர் இடம்பெறவில்லை. தொடர் விசாரணைக்கு பின்னர் இரண்டாவது முறையாக சிபிஐ கடந்த 19ஆம் தேதி அவரை விசாரணைக்கு அழைத்திருந்தது.

மனீஷ் சிசோடியா

ஆனால், அரசின் நிதிநிலை அறிக்கையைத் தயார் செய்வதற்கு சிசோடியா கால அவகாசம் கேட்டிருந்தார். அதன்படி, பிப். 26ஆம் தேதி ஆஜராக சிபிஐ அனுமதியளித்திருந்தது. இதையொட்டி, நேற்று காலை 11. 15 மணிக்கு டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் அவர் ஆஜரானார்.

டெல்லி அரசின் கலால் கொள்கையின் பல்வேறு அம்சங்கள், மதுபான வியாபாரிகளுடன் இருந்ததாகக் கூறப்படும் தொடர்புகள் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் குறித்து சிபிஐ அதிகாரிகள் துணை முதல்வர் சிசோடியாவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். சிசோடியாவின் பதில்களில் திருப்தி இல்லை என சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், முக்கிய விவகாரங்களில் அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு விளக்கங்களைத் தவிர்த்ததாகவும் கூறப்படுகிறது. 

இதைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியளவில் சிசோடியாவை சிபிஐ கைது செய்தது. அவர் இன்று சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், தீவிர விசாரணைக்கு உட்படுத்தும் வகையில் காவலில் எடுக்க சிறப்பு நீதிமன்றத்தில் அனுமதி பெறப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மனீஷ் சிசோடியா

முன்னதாக, சிபிஐ தலைமையகத்தை அடைவதற்கு முன் சிசோடியா தனது ஆதரவாளர்களுடன் ராஜ்காட் சென்று மகாத்மா காந்தி சமாதிக்கு மரியாதை செலுத்தினார். பின்னர், அங்கு சிசோடியா பேசுகையில், தான் கைது செய்யப்படுவேன் எனத் தெரிவித்திருந்தார்.

சிபிஐ முன் சிசோடியா ஆஜராவதை முன்னிட்டு, கடந்த சனிக்கிழமை நள்ளிரவு முதல் சிபிஐ தலைமை அலுவலகம் இருக்கும் பகுதியில் நான்கடுக்கு தடுப்புகளைக் காவல் துறையினர் வைத்திருந்தனர். மேலும், அந்த அலுவலகம் உள்ள தெற்கு டெல்லி மாவட்டத்தில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

அமைச்சரவையில் துணை முதல்வராகவும் நிதி, திட்டம், கலால், கல்வி, பொதுப் பணித் துறை, சுற்றுலா என 12 துறைகளுக்கும் பொறுப்பு வகித்து வருகிறார்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

 
 
 

From around the web