திரையுலகில் சோகம்... ’ஜமா’ படத்தின் கலை இயக்குநர் காலமானார்!

தமிழ் திரையுலகில் கலவையான விமர்சனங்களை பெற்ற படம் ஜமா. பாரி இளவழகன் இயக்கத்தில் வெளியான இந்த படம் தொடக்கத்தில் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் படம் ரிலீஸாகி; பிறகு பெரும் வரவேற்பை பெற்றது. இளையராஜா இசையமைப்பில் பாரியின் மேக்கிங்கும், நடிப்பும் அட்டகாசமாக இருந்தது என ரசிகர்கள் கொண்டாடினார்கள். அப்படத்தின் கலை இயக்குநரான ஸ்ரீகாந்த் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அவருக்கு இயக்குநர் பாரி இரங்கல் தெரிவித்திருக்கிறார். தமிழ் சினிமாவில் சமீப காலங்களாக நல்ல கதையம்சம் உள்ள படங்களே வருவதில்லை என்று பலரும் சொல்வதுண்டு.
ஒரே ரத்தம், சண்டை போன்றவைகளை வைத்தே ஒரு படத்தை உருவாக்கி விடுகிறார்கள்; இது கோலிவுட்டுக்கு ஆபத்தான காலம் என்றெல்லாம் கருத்துக்கள் அதிகமாக எழ ஆரம்பித்திருக்கின்றன. இருப்பினும் அவ்வப்போது நல்ல கதையம்சம் உள்ள படங்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. அப்படி வரும் படங்களை ரசிகர்களும் கொண்டாடுவதற்கு தவறுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அப்படிப்பட்ட படங்களின் வரிசையில் ஒன்றுதான் ஜமா. பாரி இளவழகன் என்கிற புதுமுகம் இயக்கி நடித்த படம்தான் ஜமா. இதில் அவருடன் சேத்தன், அம்மு அபிராமி உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள். தெருக்கூத்து கலையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாக்கப்பட்டிருந்தது. தெருக்கூத்து கலையை பற்றி அதிகம் பேசப்படாத தமிழ் சினிமாவில் ஜமா அந்தக் குறையை மாற்றி வைத்தது என்றே சொல்லலாம். இந்தப்படத்தில் தமிழ்நாட்டின் பல ஊர்களை குறிப்பாக திருவண்ணாமலை மற்று அதன் சுற்றுவட்டார பகுதிகளின் நில அமைப்பை காட்சிப்படுத்தியிருந்தனர். மேலும் தெருக்கூத்து எதன் அடிப்படையில் இயங்குகிறது; அந்தக் கலைஞர்களின் வாழ்வியல் முறை என பல விஷயங்களை ரொம்பவே எதார்த்தமாக காட்சிப்படுத்தியிருந்தார் இளவழகன்.
அந்த படத்தின் கலை இயக்குநர் ராஜ ஸ்ரீகாந்த் உயிரிழந்திருக்கிறார். அதுகுறித்து பாரி இளவழகன் தனது முகநூல் பக்கத்தில், "நான் உங்களை மிஸ் செய்கிறேன் சகோதரரே. நீங்கள் மட்டும் இல்லாமல் போயிருந்தால் ஜமா திரைப்படம் இந்த அளவுக்கு வந்திருக்காது. கலை என்று உன் வடிவில் வாழும்" எனக் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து பலரும் அவருக்கும், ஸ்ரீகாந்த்தின் குடும்பத்தாருக்கும் தங்கள் ஆறுதலை தெரிவித்து வருகின்றனர்
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!