கலைஞர் நூற்றாண்டு விழா ஸ்பெஷல்.. குறும்பட, சுருள்பட போட்டி... !

 
கலைஞர் நூற்றாண்டு விழா

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் முத்தமிழறிஞர் கலைஞரின்  நூற்றாண்டு விழாவினை சிறப்பாக கொண்டாடும் வகையில் தமிழக அரசு பல ஏற்பாடுகளை செய்து வருகிறது. அந்த வகையில் “தொலைநோக்குச் சிந்தனையாளர்-கலைஞர்” எனும் குழுவின் சார்பில்  குறும்பட போட்டி   மற்றும்  சுருள்பட போட்டி  குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.  
தொலைநோக்குச் சிந்தனையாளர்-கலைஞர் எனும் குழு, நூற்றாண்டு விழா நாயகன்  கலைஞரின்   அரும்பணிகளில்  அவரது பல பரிமாணங்களை  கொண்டாடும்  வகையில் பல்வேறு முன்னெடுப்புகளை செய்து வருகிறது.

கலைஞர் நூற்றாண்டு விழா

அந்த வகையில்,  கலைஞரின்  நூற்றாண்டு விழாவினை சிறப்பிக்கும் வகையில் தொலைநோக்குச் சிந்தனையாளர்-கலைஞர் எனும் குழுவின் சார்பில் குறும்படபோட்டியும்,  சுருள்படபோட்டியும் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்த அறிவிப்பு  31.10.2023ல்  வெளியிடப்பட்டது. அதில்  இப்போட்டிகளுக்கான விண்ணப்பங்களுடன் கூடிய குறும்படங்கள் மற்றும் சுருள்படங்களை டிசம்பர் 20,2023-க்குள் அனுப்பி வைக்கும் படி  தகவல் வெளியாகியிருந்தது. இது குறித்த  நிர்வாக காரணங்களால் இப்போட்டிகளுக்கான கடைசி தேதி 15.01.2024 வரை நீட்டிக்கப்பட்டது.

கலைஞர் நூற்றாண்டு விழா


அதன்படி இப்போட்டிகளுக்காக பெறப்படும் சுருள்படங்கள் மற்றும் குறும்படங்கள் அனைத்தும்  தொலைநோக்குச் சிந்தனையாளர்-கலைஞர் குழுவால் இறுதிசெய்யப்பட உள்ளது. இதனையடுத்து  இப்போட்டிகளில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள்  வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி குறும்படங்களை   shortfilmkalaignar100@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் மற்றும் சுருள்படங்களை reelskalaignar100@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் ஜனவரி 15, 2024 தேதிக்குள் அனுப்பி வைக்கும்படி   வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.  குறும்பட போட்டிShort film Competition) மற்றும் சுருள்பட போட்டிகளுக்கான (Reels Competition) வழிகாட்டி நெறிமுறைகள் https://dipr.tn.gov.in  என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்  

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web